வினவு
27.8.12 அன்று அதிமுக அடிமைகளின் செயற்குழு அல்லிராணி தலைமையில் கூடி, ‘அரசியல் முக்கியத்துவம்’ வாய்ந்த 16 தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கிறதாம். சரி அதில் என்ன முக்கியத்துவம் என்று “நமது எம்ஜிஆர்” பத்திரிகையை வாங்கிப் பார்த்தோம்.
நிறுவனர் ஜெயலலிதா என்று தலையில் ஆரம்பித்து வெளியீடு ஸ்ரீ ஜெயா பப்களிகேஷன்ஸ் என்ற வால் வரைக்கும் மொத்தம் 12 பக்கங்களிலும் எங்கெங்கு பார்த்தாலும் ஜெயலலிதாதான். தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்பதையே விஞ்சும் அளவுக்கு துண்டு துக்காணியிலும், சந்து பொந்துகளிலும் இருப்பாள் என்று ரணகளம்தான்.
அந்த இதழில் இன்று மட்டும் கூட்டிப் பார்த்தால் மொத்தம் எழுபது முறை “முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா” என்ற ஜிஞ்சக்கு ஜிஞ்சா வார்த்தை ஓதப்பட்டிருக்கிறது.
அதிமுக அடிமைகளின் செயற்குழு அல்லிராணி தலைமையில் கூடி, ‘அரசியல்
முக்கியத்துவம்’ வாய்ந்த 16 தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கிறார்கள், அதில்
என்ன முக்கியத்துவம் என்று “நமது எம்ஜிஆர்” பத்திரிகையை வாங்கிப்
பார்த்தோம்.
27.8.12 அன்று அதிமுக அடிமைகளின் செயற்குழு அல்லிராணி தலைமையில் கூடி, ‘அரசியல் முக்கியத்துவம்’ வாய்ந்த 16 தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கிறதாம். சரி அதில் என்ன முக்கியத்துவம் என்று “நமது எம்ஜிஆர்” பத்திரிகையை வாங்கிப் பார்த்தோம்.
நிறுவனர் ஜெயலலிதா என்று தலையில் ஆரம்பித்து வெளியீடு ஸ்ரீ ஜெயா பப்களிகேஷன்ஸ் என்ற வால் வரைக்கும் மொத்தம் 12 பக்கங்களிலும் எங்கெங்கு பார்த்தாலும் ஜெயலலிதாதான். தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்பதையே விஞ்சும் அளவுக்கு துண்டு துக்காணியிலும், சந்து பொந்துகளிலும் இருப்பாள் என்று ரணகளம்தான்.
அந்த இதழில் இன்று மட்டும் கூட்டிப் பார்த்தால் மொத்தம் எழுபது முறை “முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா” என்ற ஜிஞ்சக்கு ஜிஞ்சா வார்த்தை ஓதப்பட்டிருக்கிறது.
பதினாறு தீர்மானங்களில் கருணாநிதியை திட்டிய ஒரு
தீர்மானத்தைத் தவிர அநேக தீர்மானங்கள் ஜெயாவுக்கு பாராட்டுப்பத்திரம்
வாசித்திருப்பவைதான். அதில் ஒரு தீர்மானமான “தொலைநோக்கு திட்டம்-2027
வகுத்துத் தந்த முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மாவுக்கு கழக செயற்குழு
பாராட்டு” என்று தலைப்பில் ஒரு அம்மா, பிறகு அதே செய்தி தடித்த மேற்கோளாக
வரும் போது அதில் ஒரு அம்மா, அப்புறம் தீர்மானம் குறித்த ஆரம்ப பத்தி
முன்னுரையில் பதவி ஏற்றது குறித்த ஒரு அம்மா, தீர்மானத்தின் இறுதியில்
நன்றி தெரிவித்து ஒரு அம்மா என்று இருக்கின்றன.
எல்லாத் தீர்மானங்களையும் அடிமை இ. மதுசூதனன், கழக அவைத் தலைவர்
முன்மொழிய, அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் வழிமொழிபவர்களாக வருகின்றது.
அந்த வகையில் மதுசூதனன் பதினாறு முறை வந்தாலும் அது குட்டி
எழுத்துருவில்தான்.
இது போக புகைப்படங்களிலும் அதே அம்மா, செயற்குழுவுக்கு வந்த அம்மாவுக்கு
வரவேற்பு, கழக செயற்குழு அம்மா முன்னிலையில் நடந்தாக ஒரு செய்தி,
புகைப்படம் இப்படி சர்வமும் அம்மா மயம்தான். ஆனால் எல்லா இடத்திலும் தமிழக
முதலமைச்சர் புரட்சித் தலைவர் அம்மா என்று இருக்கிறது என்பதுதான்
முக்கியம்.
தமிழக வரலாற்றிலேயே எந்த ஓர் அரசியல் கட்சியும் அடைந்திராத சாதனையான 21
ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டை ஆட்சி புரியும் பெருமையை பெற்றுத் தந்த
புரட்சித் தலைவி அம்மாவுக்கு நன்றி என்று ஒரு தீர்மானம். ஜால்ராவைக் கூட
விதவிதமான மேத்தமேடிக்ஸ் போட்டு எப்படி தினுசு தினுசாக யோசிக்கிறார்கள்
பாருங்கள்!
“மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கைக் கண்டித்து ஜனநாயக கடமையாற்றும்
புரட்சித் தலைவி அம்மாவுக்கு பாராட்டு” என்று ஒரு தீர்மானம்! இதற்கு ஏதாவது
பொருள் உண்டா? லெட்டர் போட்டு கண்டிப்பதெல்லாம் ஜனநாயக கடமை என்றால்
ஜனநாயகமே உன் விலை என்ன? விட்டால் தமிழக போலிசாரின் சட்டையை பேண்டுக்குள்
இன் பண்ண வைத்து ஜனநாயக கடமையாற்றும் அம்மா என்று கூட பாடுவார்களோ,
தெரியவில்லை.
அநேகமாக ஜெயலலிதா தன் வாழ்நாளில் அதிகம் கேட்ட, அதிகம் படித்த வார்த்தை
என்பது இந்த அம்மா புராணம் மட்டுமாகத்தான் இருக்கும். அதையும் இத்தனை நாள்
போராடிக்காமல் அலுக்காமல் மகிழ்ச்சியுடன் கேட்டு, படித்து ரசிக்கிறார்
என்றால் அவரது புகழ் போதை என்பது எத்தனை வீரியம் கொண்டதாக இருக்கும்? அந்த
புகழை யாராவது சற்றே தீண்டுவது போல தொட்டுவிட்டால் எத்தனை கோபம் இருக்கும்?
ஜெயலலிதா ஒரு பாசிஸ்ட்டு என்பதற்கு இந்த ஜால்ரா நார்சிச நோய் ஒரு சான்று.
ஆனால் இந்த பாசிஸ்டின் மீதான அடிமைத்தனத்தை அதிமுக அடிமைகள் மட்டும்தான்
வைத்திருக்கிறார்கள் என்பதல்ல. தினமலர், தினமணி போன்ற ஊடக அடிமைகளும்
இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்க. அதிலும் இன்றைய தினமணியில் அ.தி.முக
தீர்மானங்களை முக்கால் பக்கத்திற்கு போட்டிருந்தாலும் அதிலும் முக்கால்
இடம் கருணாநிதியை கண்டித்த தீர்மானத்திற்குத்தான்.
ஆக, தினமணியை அம்மா புரட்டும் போது இந்த கண்டிப்பு ஃபோகசை பார்த்து
கண்குளிர, மனம் குளிர நம்மை நினைப்பார் என்பதுதான் தினமணி அடிமைகளின்
எதிர்பார்ப்பு! இதைத்தான் அம்மாவுக்கு பின்னாடி நிமிர்ந்த நன்னடை, அம்மா
பார்க்கும் நேர்கொண்ட பார்வை, அம்மாவைக் கண்டிக்கும் நிலத்தில் யார்க்கும்
அஞ்சாத நெறிகள்! என்று தனது முத்திரை வாக்கியமாக தினமணி போட்டிருக்கிறது
போலும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக