ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

மலேசியாவுக்கு நித்தியானந்தா வர கடும் எதிர்ப்பு

 Malaysia Hindu Sangam Protest Against Nithyananda இந்து சங்கமே இருக்காது என நித்தி ஆதரவாளர் மிரட்டல்

கோலாலம்பூர்: இந்தியாவில் பெரும் சர்ச்சைக்குரியவராக இருக்கும் நித்தியானந்தா மலேசியாவிலும் சர்ச்சைக்குரியவராகிவிட்டார்.
மலேசியாவுக்கு வெளிநாட்டிலிருந்து சமயத் தலைவர்களோ அல்லது கோயில்களில் பணிபுரிவரோ வரவேண்டுமானால் இங்குள்ள மலேசிய இந்து சங்கத்தின் அனுமதியை பெற்றாக வேண்டும். இந்நிலையில் நித்தியானந்தாவை மலேசியாவுக்கு வரவழைக்க அவரது அடிப்பொடி ஒருவர் மிகவும் பகீரத பிரயத்னப்பட்டிருக்கிறார். ஆனால் சர்ச்சைக்குரிய நபரான நித்தியானந்தா மலேசியா வர இந்து சங்கம் அனுமதி கொடுக்கவில்லை.

இதில் மூக்குடைபட்டுப் போன நித்தியானந்தா அடிப்பொடி, இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் மோகன் ஷாணுக்கு மிரட்டல் விடுத்திருக்கிறார். நித்தியானந்தாவுக்கு அனுமதி கொடுக்காவிட்டால் இந்து சங்கம் முன்பு மறியல் போராட்டம் நடத்துவோம் என்றும் இந்துசங்கத்தையே அழித்துவிடுவோம் என்றும் மோகன் ஷாண் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மோகன் ஷாண் கூறியுள்ளதாவது:
பாலியல் குற்றம் உட்பட பல குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருக்கும் நித்தியானந்தா மலேசியாவுக்கு வர மலேசிய இந்து சங்கம் ஒருபோதும் அனுமதிக்காது. இந்நாட்டில் இயங்கிவரும் இந்து சமய இயக்கங்களும் அவரது வருகையை ஏற்காது. எனவே தகுந்த விதிமுறைகளுடன் இயங்கி வரும் மலேசிய இந்து சங்கம் இதுபோன்ற மிரட்டல்களுக்கு அஞ்சப் போவதில்லை. இந்நாட்டில் முறையான சமயம், மற்றும் கலாச்சாரத்தைப் பேண பாடுபட்டு வரும் மலேசிய இந்து சங்கத்துக்கு எதிராக மிரட்டல் விடுப்பது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற மிரட்டல்களுக்கு இந்து சங்கம் ஒருபோதும் அடிபணியாது என்றார் அவர்.

கருத்துகள் இல்லை: