திட்டமிட்ட சதியில் வேண்டுமென்றே இழுத்துவிட்ட வஞ்சகர்கள் கனவும் காணமுடியாத ஒரு தொகையை ஊழல் செய்தேன் என்று சதியாளர்கள் பின்னிய வலை நொறுங்கும் காலம் வரும் அப்போது சதியாளர்கள் வசவாளர்கள் எல்லாம் பதில்கூற வேண்டிய நேரம் வரும்
Posted by: Chakra
நீலகிரி தொகுதி எம்பியான ஆ.ராசா அந்தத் தொகுதியில் உள்ள மஞ்சூரில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் பேசுகையில்,
நீலகிரி நாடாளுமன்றத் வேட்பாளராக போட்டியிட நீலகிரி மாவட்டத்திற்கு நான் காலடி வைத்து வாக்கு சேகரித்து போது மக்கள் எவ்வளவு எழுச்சி கொண்டு என்னை வரவேற்றார்களோ அதேப் போல் இன்றும் என்னை இந்த மாவட்ட மக்கள் வரவேற்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். என்னை வரவேற்க வந்த நீலகிரி மாவட்ட மக்களுக்கு என் நன்றியை அவர்களுடைய காலடியில் வைக்கிறேன்.
நான் மத்திய அமைச்சராக பதவி வகித்தபோது செய்த சாதனையையும், அதே நேரத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றம் சாட்டப்பட்டு நான் சிறையில் இருந்த போது எனக்கு ஏற்பட்ட சோதனைகளையும் இங்கே பேசினார்கள்.
சாதனை, சோதனை இரண்டையும் என் இரு கண்களாக பாவிக்கிறேன். மத்திய அமைச்சராக நான் பதவி வகித்த போது இந்தியா முழுவதும் 30 கோடி மக்கள் தான் தொலைபேசி வசதியை பெற்றிருந்தனர். இதை தற்போது 90 கோடியாக மாற்றியுள்ளேன்.
நகர மக்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த தொலைதொடர்பு வசதியை கிராம மக்கள் அனைவரும் விரிவாக்கினேன். தொலைத்தொடர்பு கட்டணம் ரூ.1.20 என இருந்ததை வெறும் 30 காசுகளாகக் குறைத்தேன்.
கடந்த திமுக ஆட்சியில் நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் ஏராளமான பொருட்சேதம் ஏற்பட்டது. இதனை சீர் செய்ய குறைந்தது 3 மாத காலமாகும் என்று தெரிவித்தனர். அப்போது, முதல்வராக இருந்த கருணாநிதியின் உத்தரவின் பேரில் போர்க் கால அடிப்படையில் 3 வாரங்களிலேயே நிலைமையை சீர் செய்தேன்.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான் நிரபராதி என்று விரைவில் நிருபிப்பேன் என்றார் ராஜா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக