நியூயார்க்: அமெரிக்க காமெடி நடிகை ரோசி ஓ டோனல்,
தனது நெருங்கிய தோழியை திருமணம் செய்து கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
இருப்பினும் பல்வேறு விதமான கண்டிஷன்களைப் போட்டு அதற்கு அவரது தோழி
ஒப்புக் கொண்ட பின்னரே அவரை மணந்துள்ளாராம் ரோசி. Rosie O'Donnell is married! The 50-year-old talk show host announced her marriage to fiancee Michelle Rounds
Monday. The pair have been dating for about six months and married the
head hunter in early June, though they just revealed the good news
today.
ரோசி மணந்து
கொண்டுள்ள பெண் மி்ச்சல் ரெளன்ட்ஸ் அவரது உறவுப் பெண்தான். ஜூன் மாதம்
இந்தத் திருமணம் நடந்ததாம். ரெளன்ட்ஸுக்கு ஒரு ஆபரேஷன் நடப்பதற்கு முன்பு
இந்தத் திருமணத்தை முடித்துள்ளார் ரோசி.50 வயதாகும் ரோசி, தனது பிளாக்கில் தங்களது திருமணத்தை அறிவித்துள்ளார். நியூயார்க்கில் வைத்து இந்தத் திருமணம் ஜூன் 9ம் தேதி நடந்தது. ஜூன் 14ம் தேதி ரெளன்ட்ஸுக்கு ஆபரேஷன் நடைபெற்றது. ரோசிக்குமே கூட சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு குணமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணத்திற்குப் பின்னர் தானும், ரெளன்ட்ஸும் நெருக்கமாக இருக்கும் பல்வேறு போட்டோக்களை டிவிட்டரில் போட்டபடி இருக்கிறார் ரோசி.
இந்த நிலையில் ரெளன்ட்ஸுக்கு ஏகப்பட்ட நிபந்தனைகளைப் போட்ட பின்னரே ரோசி அவரைக் கரம் பிடித்துள்ளார் என்ற புதிய விவரம் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 8 மாத காலமாக இதுதொடர்பாக ரெளன்ட்ஸுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடத்தி வந்தாராம் ரோசி. அவர் போட்ட நிபந்தனைகளில் முக்கியமானது, தனக்கு துரோகம் செய்தால், தன்னிடமிருந்து ஒரு பைசா கூட கிடைக்காது என்பதாகும்.
திருமணத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் இதுதொடர்பாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாராம் ரெளன்ட்ஸ்.
முதலில் ரோசியின் கடுமையான நிபந்தனைகளுக்கு ஒத்துப் போகவில்லையாம் ரெளன்ட்ஸ். இதனால்தான் அவர்களது திருமணம் இழுத்துக் கொண்டே போனதாம். கடைசியில் ரோசியின் அன்பை விட மனசில்லாமல் அவர் கூறியதற்கெல்லாம் சரி என்று தலையை ஆட்டி கையெழுத்திட்டாராம் ரெளன்ட்ஸ்.
இந்த நிபந்தனைகள் குறித்தப் பேச்சுவார்த்தையில் வக்கீல்களும் கூட இடம் பெற்றதாக தகவல்கள் கூறுகின்றன.
ரோசிக்கு 50 வயதாவதைப் போல ரெளன்ட்ஸுக்கு 40 வயதாகிறது. ரோசியின் நியூயார்க் வீட்டில் வைத்துதான் திருமணம் நடந்ததாம்.
என்னவோ போங்கப்பா, ஒண்ணுமே புரியலை...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக