செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

Manmohan Sing: CAG தயாரித்துள்ள அறிக்கை தவறானது

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் (சி.ஏ.ஜி.,) தயாரித்துள்ள அறிக்கை தவறானது' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். இருப்பினும், பிரதமரின் எந்தவொரு விளக்கத்தையும் ஏற்கத் தயாராக இல்லாத பா.ஜ., "அவர் பதவி விலகியே தீர வேண்டும்' என, பிடிவாதம் காட்டுகிறது. கடும் அமளி காரணமாக, இரண்டு சபைகளும் பாதிக்கப்படுவது, தொடர்கதையாகி வருவதால், பார்லிமென்ட் கூட்டத்தொடர், திட்டமிட்டபடி நடக்குமா என்பது சந்தேகமாகி விட்டது.
நிலக்கரி சுரங்கங்களை, தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியதில், பெரும் முறைகேடு நடந்திருப்பதாகவும், அரசுக்கு 1.86 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் சி.ஏ.ஜி., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இது, மத்திய அரசுக்கு நெருக்கடியை உருவாக்கியுள்ளது. "பிரதமர் பதவியிலிருந்து, மன்மோகன் சிங் விலக வேண்டும்' என, பா.ஜ., போர்க்கொடி உயர்த்தி வருகிறது. இரு சபைகளிலுமே, எதிர்க்கட்சிகள் ரகளையில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த வாரம் முழுக்க வீணாகிவிட்ட நிலையில், நேற்றும் பார்லிமென்ட் ஸ்தம்பித்தது.

கருத்துகள் இல்லை: