திரை உலகின் ஆணாதிக்கத்தை முதல் முதலில் உடைத்தெறிந்த நடிகை என்ற பெருமையை நயன்தாரா பெற்றுவிட்டார்.
நடிகை நயன்தாராவின் சினிமா மறுபிரவேசத்திற்குப் பிறகு அவருக்கு வந்த வாய்ப்புகளும், அதை அவர் தட்டிக்கழித்த விவரமும் அனைவரும் அறிந்தது.
வளர்ந்துவரும் இயக்குனர்களும் ஏன் ஓரளவுக்கு பெயர் பெற்றுவிட்ட
இயக்குனர்களுமே நயன்தாராவின் கால்ஷீட்டுக்காக அவர் வீட்டில் கால் கடுக்க நின்று வெறும் கையோடு தான் திரும்பி வந்தார்கள்.நயன்தாராவின் மார்கெட்டும், பரபரப்பும் உச்சத்தில் இருப்பது தான் இதற்கு காரணம் என்று மற்றவர்களும் சிறு பெருமூச்சோடு விட்டுவிட்டனர். ஆனால் மணிரத்னம் படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக்கொள்ளாமல் போனதும் தான் நயன்தாரா பற்றிய பேச்சு கோடம்பாக்கத்தில் அதிகமானது. அதுவும் பலதடவை கதை கேட்டு பின் யோசித்து கடைசியில் மாட்டேன் என்ற ஒரே ஆள் நம்ம நயன் மட்டும்தான் ராமேஸ்வரத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில்,இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கார்த்திக் மகன் கௌதம் நடிக்கும் கடல் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
கடல் படத்தில் நடிகர் அர்ஜூன், அரவிந்த்சாமி ஆகியோரும் முக்கியக்கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். அர்ஜூன் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேசினார்களாம். மணிரத்னம் படம் என்பதால் கதையையும், கதையில் நயன்தாராவின் கேரக்டர் ரோலையும் பலமுறை கேட்டு யோசித்துப் பார்த்த நயன்தாராவிற்கு திருப்தி இல்லாததால் “என் கேரக்டருக்கு அழுத்தம் இல்லை. அதோடு நீங்கள் கேட்கும் கால்ஷீட்டும் கொடுக்க முடியாது. ஏற்கனவே மூன்று படங்களுக்கு மேல் கையில் இருக்கிறது” எனச் சொல்லி நிராகரித்துவிட்டாராம்.முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் போது மணிரத்னம் படமாக இருந்தாலும் கேரக்டர் ரோல் செய்தால் மார்கெட் போய்விடும் என்பது போன்ற சில யோசனைகளும் நயன்தாராவின் காதுகளுக்கு போனதால் தான் இந்த பிரச்சினை வேண்டாம் என்று நயன்தாரா மறுப்பு சொல்லிவிட்டார் என்கிறது சினிமா வட்டாரம்.ஓங்காரம், ஜெகன்மோகன் ஐ.பி.எஸ்,லவ் ஸ்டோரி, விஷ்ணுவர்தன் படம் ஆகியவற்றில் பிஸியாக இருக்கிறார் நயன்தாரா. நயன்தாராவிற்கு முன் அந்த கேரக்டரில் நடிக்கவிருந்த நடிகை சமந்தாவும் சில காரணங்களால் கடல் படத்திலிருந்து விலகிவிட்டது குறிப்பிடத்தக்கது.கடல் படத்தில் கௌதம் ஜோடியாக, நடிகை ராதாவின் இளைய மகள் துளசி நடிக்கிறார். பசுபதி, பொன்வண்ணன், தம்பிராமையா ஆகியோரும் துணை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக