கலைஞர் செய்திகள .காம் :சேனல்
விஷன் யூடியூப் சேனலில் அவதூறு கருத்துக்களை பதிவிட்ட மதன்
ரவிச்சந்திரனுக்கு எதிராக தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்,
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்தில் காலுன்றுவதற்காக பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் கும்பல்கள் பல குறுக்கு வழியை கையில் எடுத்துள்ளது. அந்த வகையில், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பொய்களை வெளியிடுவதிலும், பார்வையாளர்களை தவறான பாதை நோக்கி வழி நடத்துவதிலும் சில மோசடியாளர்களை களம் இறக்கியுள்ளது. அப்படி இறக்கப்பட்ட மாரிதாஸ் வரிசையில் மதன் ரவிச்சந்திரனும் ஒருவர்.
பல சேனலில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி துரத்தியடிக்கப்பட்ட மதன் ரவிச்சந்திரன் சேனல் விஷன் என்ற யூடியூப் சேனலைத் தொடங்கியுள்ளார். அந்த சேனலின் நோக்கமே தமிழகத்தில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைப் பற்றி பொய் தகவலை தருவதுதான்.
இந்நிலையில், சேனல் விஷன் யூடியூப் சேனலில் அவதூறு கருத்துக்களை பதிவிட்ட மதன் ரவிச்சந்திரனுக்கு எதிராக தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த அவதூறு வழக்கில், மதன் ரவிச்சந்திரன் என்பவர் தனது சேனல் விஷன் எனும் யூடியூப் சேனலில், மான்கறி vs உதயநிதி ஸ்டாலின்/ திருப்போரூர் துப்பாக்கி சூடு என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தனக்கும், தனது குடும்பத்தாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி, தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
தன்னைப் பற்றி உண்மைக்குப் புறம்பாக மக்கள் மத்தியில் அவதூறு செய்தி பரப்பும் மதன் ரவிச்சந்திரன் மீது இந்திய தண்டனை சட்டம், அவதூறு சட்டப் பிரிவின் கீழ் விசாரித்து, கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக