புதன், 29 ஜூலை, 2020

இணைந்த வடக்கு கிழக்கு மாகாண வரை படங்களை ராஜீவ் காந்திக்கு கொடுத்தோம் ... இலங்கை இந்திய ஒப்பந்தம் வந்த வரலாறு 12

  திரு. அ . அமிர்தலிங்கம் : இலங்கை அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை !



திம்பு பேச்சு வார்த்தையில்போராளி இயக்கங்கள் எல்லாம் கலந்துகொண்டன. ஆனால் 1986 ஜூலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள அவை மறுத்துவிட்டன. ஆனாலும் தமிழர் விடுதலை கூட்டணி கலந்து கொள்வதை அவை எதிர்க்கவில்லை என கூறினர்
சிதம்பரம் திட்டத்தில் பல குறைபாடுகள் இருப்பினும் அதை ஒரு ஆரம்ப பத்திரமாகவே அதை கைக்கொண்டோம். அதே நேரத்தில் நாம் 1985 . முன் வைத்த திட்டத்தையும் எடுத்து கொண்டு  அத்திட்டத்தை அடையும் நோக்கத்தோடு நாம் முயற்சி செய்தோம். இந்தியாவில் ஒரு மாநிலத்துக்கு உரிய அதிகாரத்தை பூரணமாக பெறுவதற்கான அரசியல் அமைப்பு திருத்த சட்ட மூலம்   மாகாண சபை  சட்ட மூலம்  ஆகிய இரண்டையும் பரிசோதனை செய்தோம் .
விரிவான விவாதத்தின் பலனாக ஒன்றை திருத்தி ஒன்றாக  ஏழு சட்ட வரைவுகள் தயாரிக்க பட்டன.  ஜூலை ஆகஸ்டு இரண்டு மாதங்களிலும் இருபது நாட்களுக்கு மேலாக பேசினோம்.
முதல் சுற்று பேச்சு முடிந்தவுடன் விடுதலை புலிகள் உட்பட தமிழகத்தில் பலருடனும் டெல்லையில் அமைச்சர்கள்  சிவசங்கர் , சிதம்பரம்  ஆகியோர் மற்றும் திரு. ஜி பார்த்தசாரதி  திரு வெங்கடேஸ்வரன் சட்ட நிபுணர் பாலகிருஷ்ணன்  ஆகியோரிடம் கலந்து ஆலோசித்தோம்.
இரண்டாவது சுற்று பேச்சு  ஆகஸ்ட் 29 ஆம் திகதி முடிவடைந்தது..
அன்று முக்கியமாக  வடக்கு கிழக்கு இணைப்பு பற்றியே விவாதித்தோம் .
இணைப்பு உட்பட சில முக்கிய விடயங்களில் உடன்பாடு எதுவும்  ஏற்படாத  நிலையில் பேச்சு வார்த்தை ஒத்தி வைக்கப்பட்டது.
மூன்றாவது சுற்று பேச்சு வார்த்தைக்கு போராளிகளும் கலந்து கொள்ளவேண்டும் என்று வற்புறுத்தினோம்.

இலங்கை அரசும் இந்தியா அரசும் இதற்கு ஒப்புக்கொண்டன.
எல்லோரும் பங்கு பற்ற கூடியதாக டெல்லியில் இச்சந்திப்புக்கு ஒழுங்கு செய்வதாகவும் ,

அதற்கு முன் இது வரை பேசி தீர்க்க படாத விடயங்களை உள்ளடிக்கிய திருத்தப்பட்ட வரைவுகளையும் , தமிழ் பிரதேச ஒற்றுமை பற்றிய எமது கோரிக்கைக்கு இலங்கை அரசின் பதிலையும் காணி பங்கீட்டு அதிகாரம் உட்பட  தீர்வு காணப்படாத விடயங்கள் பற்றி  இலங்கை அரசின் கருத்துக்களையும் கூடிய விரைவில் அனுப்பி  வைப்பதாகவும் ஏற்று கொள்ளப்பட்டது .
கொழும்பில் இருந்து திரும்பியதும் ஏனைய இயக்கங்களை சந்திக்க முயற்சி செய்தோம் . அவர்கள் எம்மோடு பேச மறுத்து விட்டனர்.

இலங்கை அரசின் திட்டமும் எமது பதிலும் .

அரசியல் அமைப்பு திருத்தங்கள் , மாகாண சபை  சட்ட மூலம் , வடக்கு கிழக்கு இணைப்பு பற்றிய கோரிக்கைக்கு அரசின் பதில் ,
காணி பங்கீடு பற்றிய வரைவு ஆகியவைசெப்டெம்பர் 4 ஆம் திகதியும்  மத்திய அரசுக்கும் மாகாண சபைகளுக்கும்  இடையில் அதிகாரபங்கீடு பற்றிய மூன்று  பட்டியல்களும் 23  திகதியும் அரசுக்கு அனுப்பபட்டன.
 எட்டு நாட்களுக்கு மேலாக டெல்லி சட்ட நிபுணர்களோடு கலந்து ஆலோசனை நடத்திய பின் செப்டெம்பர் 30ஆம் திகதியும்  அக்டோபர் 4 ஆம்   திகதியும் விரிவான பதிலை தயாரித்து இந்திய வெளி நாட்டமைச்சர்  திரு சிவசங்கரிடம் கொடுத்தோம் .
அப்பதிலில் அரசியல் அமைப்பு திருத்த விதி 154  பின்வருமாறு அமைய வேண்டும் என்று கூறினோம்.
154  எ அரசியல் அமைப்பின் இவ் 11 வது  திருத்தம் நடைமுறைக்கு வரும் திகதியில் இருந்து  எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்படும் ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒரு  மாகாண சபை நிறுவப்படும் .

குறிப்பு :
1 எட்டாவது அட்டவணையில்  மாகாணங்கள் குறிப்பிடப்படும்போது  வடக்கு கிழக்கு இணைந்த ஒரு தமிழ் மொழி வாரி மாகாணம்  அட்டவணையில்  இடம்பெற  வேண்டும்..

2    . எட்டாவது அட்டவணையில் மாகாணங்கள் குறிப்பிட பட்டபின்  சம்பந்த பட்ட மாகாண சபைகளின் சம்மதமின்றி சபைகளில் எந்தவித மாற்றங்களும் செய்யப்பட மாட்டாது.

என்று நாம் தெளிவாக குறிப்பிட்டோம் .  இன்று இந்தியா இலங்கை ஒப்பந்தத்தில் நாம் கோரியது போல  இணைந்த தமிழ் மாகாணமே  இடம் பெற்றிருகிறது .
நான்கு ஆண்டுகளாக் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளில்  எக்கட்டத்திலும் நாம் இக்கொள்கைகளில்  சிறிதும் விட்டு கொடாது நாம் உறுதியாக நின்றோம்.

அக்டோபர் 4 ஆம் திகதி நாம்  திரு  சிவசங்கருக்கு   அனுப்பிய கடிதத்தில் இன்னும் பேச்சு வார்த்தையில் எடுக்கப்படாத   விசயங்களை குறிபிட்டு அவற்றை தீர்ப்பதற்கு வழி காணப்படவேண்டும் என்று கூறி இருந்தோம் .

மேற்குறிப்பிட்ட விடயங்களை தவிர திருகோணமலை   துறைமுகம் ஆயுதபடைகள் , அரச சேவைகள்   ஆகியவற்றில் எமது இடம் உத்தயோக மொழி , வேலை வாய்ப்பு , மத்திய் அரசில் தமிழ் மக்களின் இடம்  போன்ற பல் முக்கிய விடயங்கள்  இலங்கை அரசோடு பேசி தீர்க்க வேண்டி இருக்கின்றன.
என்று அக்கடிதத்தில் முடித்தோம்.
 எமத விரிவான கடிதத்தை பிரதமர் ராஜீவ் காந்தி ஜனாதிபதி ஜே ஆர்   ஜெய்வர்த்தனவிடம் பெங்களூரில் கையளித்தார்.

பெங்களூர் பேச்சு வார்த்தை :

தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு மாநாட்டு கூட்டம்  பெங்களூரில் நவம்பரில் நடந்தது . அம்மாநாட்டுக்கு வருகை தந்த ஜனாதிபதி ஜெ ஆர் ஜெயவர்த்தனாவோடு  இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு பற்றி  பிரதமர் ராஜீவ் காந்தியும் அமைச்சர்கள் சிதம்பரம் , நட்வர்சிங்   ஆகியோரும்  தமிழக முதல்வர் மற்றும் உணவு அமைச்சர் வெளிநாட்டு அமைச்சு அதிகாரிகள் ஆகியோரும்  பல மணித்தியாலங்கள் உரையாடினர்.
இலங்கை அரசின்  திட்டத்திற்கு எமது விரிவான பதிவின்  பல பகுதிகள் ஆராயப்பட்டன.   .
காணி பங்கீடு  கவர்னரின் அதிகாரம் போன்ற விடயங்களுக்கு இலங்கை அரசு சில மாற்று யோசனைகளை தெரிவித்தது .
டெல்லியில் இச்சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதாகவும் அதற்கு முன் இதுவரை பேசி தீர்வு கானப்படாத விடயங்களை உள்ளடடக்கிய திருத்தப்பட்ட வரைவுகளையும் தமிழ் பிரேதேசங்களின் ஒற்றுமை குறிந்த எமது கோரிக்கைக்கு இலங்கை அரசின் பதிலையும், காணிப்பங்கீட்டு அதிகாரம் உட்பட தீர்வு காணப்படாத விடயங்கள் பற்றி இலங்கை அரசின் கருத்துக்களையும் கூடிய விரைவில் அனுப்பி வைப்பதாகவும் ஏற்று கொள்ளப்பட்டது.
 கொழும்பில் இருந்து திரும்பியதும் ஏனைய இயக்கங்களை சந்திக்க முயன்றோம் . அவர்கள் எம்மை சந்திக்க மறுத்து விட்டனர்.

இலங்கை அரசின் திட்டமும் எமது பதிலும் :

அரசின் அமைப்பு திருத்தங்கள் மாகாண சட்ட மூலம் வடக்கு கிழக்கு இணைப்புக்கு எமது கோரிக்கைக்கு அரசின் பதில் , காணி பங்கீடு பற்றிய வரைவு ஆகியவை செப்டெம்பர் 4 திகதியும் மத்திய அரசுக்கும்  மாகாண சபைகளுக்குமான அதிகார பகிர்வு பற்றிய மூன்று பட்டியல்களும் 23 திகதி இலங்கை அரசினால் அனுப்பட்டன.
எட்டு நாட்களுக்கு மேலாக டெல்லி சட்ட நிபுணர்களோடு கலந்து ஆலோசனை நடத்திய பின் செப்டெம்பர் 30 யும் அக்டோபர் 4 ஆம் திகதியும் விரிவான பதிலை தயாரித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் சிவசங்கரிடம் கொடுத்தோம்.
அப்பதிலில்  அரசியல் அமைப்பு சட்ட விதி 134  பின்வருமாறு அமைய வேண்டும் என்று கோரினோம்  134 (எ ) 1 அரசியல் அமைப்பின் இவ் 11 வது திருத்தம் நடமுறைக்கு வரும் திகதியில் இருந்து எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்படும் ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒவ்வொரு மாகாண சபை நிறுவப்படும்.

குறிப்பு :

1.  எட்டாவது அட்டவணையில்மாகாணங்கள் என்று   குறிப்பிடும்போது வடக்கு கிழக்கு இணைந்த  ஒரு தமிழ் மொழிவாரி மாகாணம் என்று குறிப்ப்பிட படவேண்டும்.
2 ..  எட்டாவது அட்டவணையில் மாகாணங்கள் என்று குறிப்பிடப்பட்ட பின் சம்பந்தப்பட்ட மாகாணங்களின் சம்மதம் இன்றி மாகாணங்களில் எந்தவித மாற்றங்களும் செய்யப்பட மாட்டாது.
என்று நாம் தெளிவாக குறிப்பிட்டோம் .
இன்று நாம் கோரியது போலவே  இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் இணைந்த தமிழ் மாகாணம் இடம் பெற்று இருக்கிறது .
நான்கு ஆண்டுகளாக நடந்த பேச்சு வார்த்தைகளில் எக்கட்டத்திலும் நாம் எமது கொள்கையை விட்டு கொடுக்காமல் உறுதியாக நின்றோம்..
அக்டோபர் 4 ஆம் திகதி நாம் திரு .சிவசங்கருக்கு எழுதிய கடிதத்தில்  இன்னும் பேச்சு வார்த்தையில் எடுக்கப்படாத விடயங்களையும் குறிப்பிட்டு அவற்றையும் தீர்ப்பதற்கு வழி காணப்பட வேண்டும் என்று கூறியிருந்தோம்.
மேற்குறிப்பிட்ட விடயங்களில் திருகோணமலை துறைமுகம் . ஆயுத படைகளில் அரச சேவைகளில் எமது இடம் , உத்தயோக மொழி, வேலை வாய்ப்பு ,
மத்திய் அரசில் தமிழ் மக்களுக்கான இடம் போன்ற பல விடயங்கள் இலங்கை அரசோடு பேசி தீர்க்கவேண்டி உள்ளது என்று அக்கடிதத்தை முடித்தோம்.
எமது விரிவான கடிதத்தை பிரதமர் ராஜீவ் காந்தி பெங்களூர் மாநாட்டில் வைத்து ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்தனவிடம் கையளித்தார் .

.
இந்த நேரத்தில் இந்திய பிரதமரின் ஆலோசகர்களாக இருந்த சிலர் கிழக்கு மாகாணம் பற்றி தவறான கருத்துக்களை கொண்டிருந்தனர என்பதையும் காணக் கூடியதாக  இருந்தது .
இதனால் கிழக்கு மாகாணம் பற்றி ஒரு விரிவான கடிதம் திரு ராஜீவ் காந்தி அவர்களுக்கு 1986 டிசம்பர் 14 ஆம் திகதி எழுதினோம்.
கிழக்கு மாகாணத்தில் சிங்கள குடியேற்ற வரலாறும்  அங்கு புதிதாக  உருவான சிங்கள தொகுதிகளும்  நிர்வாக பிரிவுகளும் ,
அபிவிருத்தி செய்யப்படாத நிலங்களை எல்லாம் சேர்த்த சூழ்ச்சி.
1983  கலவரங்களின் பின்பு குடிபெயர்ந்த மக்கள்,
கிழக்கு மாகாணத்தை மூன்று பிரிவுகளாக பிரிக்கும்  ஆலோசன்யின் பின் உள்ள பயங்கர திட்டம்,
திருகோணமலை துறைமுகத்தின் முக்கியத்துவம் ,
வடக்கும் கிழக்கும் இணைந்த ஒரே மாகாணத்தை இலங்கை அரசு எதிர்க்கும் உண்மை காரணம்  இவற்றை எல்லாம் எமது கடிதத்தில் விளக்கினோம்.
1827  ஆம் ஆண்டு முதல் 1981 ஆம் ஆண்டுவரை கிழக்கு மாகாணத்தில் குடியேற்றங்களால் ஏற்பட்ட குடிசன மாற்றங்களை விளக்கும் புள்ளி விபர தொகுப்புக்களையும் ,
இலங்கை அரசு சமர்ப்பித்த  பிழையான வரைபடங்களுக்கு பதிலாக கிழக்கு மாகாணத்தின் சரியான குடிசன வீதத்தை காட்டும் சரியான வரைபடங்களையும் அனுப்பினோம்.
கொழும்பு பேச்சு வார்த்தை தொடர்ந்து நடத்துவதற்கு அமைச்சர் சிதம்பரமும் நடவர்சிங்கும் எம்மையும் ஏனைய இயக்கங்களையும் சென்னையில் முதலமைச்சர் அலுவலகத்தில் சந்தித்தனர்.
அப்போது அவர்களிடம் மேற்படி கடிதம் , புள்ளிவிபரம் மற்றும் வரை படங்களையும் கொடுத்து ,
கிழக்கு மாகாணத்தை மூன்றாக பிரிக்கும் திட்டத்தை தமிழ் மக்கள்  ஒருபோதும் ஏற்று கொள்ள மாட்டார்கள் என்பதையும்,
வடக்கும் கிழக்கும் இணைந்த ஒரே மாகாணமே தமிழ் மக்களுக்கு ஏற்புடையதாக இருக்கும் என்பதையும் விளக்கினோம் .. தொடரும்

கருத்துகள் இல்லை: