A Sivakumar : Metoo என்பது. . - ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் குரல் எழுப்புவதற்கும், தவறு செய்த ஆண்களை பொதுவில் குற்றம் சொல்லி அப்படியான ஆண்களின் உண்மை முகத்தை உலகிற்கு உணர்த்துவதற்கும், - பாதிக்கப்பட்டு உள்ளுக்குளேயே குமுறிக்கொண்டிருக்கும் பெண்கள் தைரியமாக வெளியே வந்து சொல்வதற்கும், அது ஒரு ஆரம்ப முயற்சி என்று தான் சொல்லப்பட்டது
கடைசியில் அது சாட்டையடி பதிவு தோழி கூட்டத்திற்கு பயன்பட்ட அளவுக்கு கூட பெண்களுக்கு பயன்படவில்லை என்பது தான் சோகம்.
பாருங்களேன்...
அந்த நேரத்தில் யார் யார் மீதோ யார் யாரோ குற்றம்
சொன்னாலும், சுமார் ஒரு வருடம் கழிந்த நிலையில் அதில் சிக்கிய வைரமுத்துவை
அடிப்பதற்கு இன்றும் தயாராக இருப்பவர்கள் எவருமே நேற்று தற்கொலை
முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் இருக்கும் நடிகை விஜயலட்சுமி
குறித்து மறந்தும் வாயை திறக்க மறுக்கிறார்கள்.
வைரமுத்து - சின்மயி - சீமான் - விஜயலட்சுமி நால்வரில் யார் பக்கம் உண்மை இருக்கிறது என்று நமக்கு தெரியாது.
ஆனால் போன வருசம் புகார் சொன்ன சின்மயிக்கு இந்த வருசம் குரல் கொடுத்த
ஆண்கள் & பெண்கள் யாராவது ஒருவரேனும் விஜயலட்சுமி குறித்து ஏதாச்சும்
எழுதியிருக்காங்களான்னு பார்த்தேன்.. வாய்ப்பே இல்லை ராசா...வாய்ப்பே இல்லை என்று மூஞ்சு புத்தகம் சொல்லிடுச்சு. சின்மயி: 1 | வைரமுத்து: 0 சீமான்: 1 | விஜயலட்சுமி: 0
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக