செவ்வாய், 28 ஜூலை, 2020

அப்துல் கலாம் ... ஒரு போலி புனித பிம்பம்

Fazil Freeman Ali
: இந்தியாவில் ஒரு முஸ்லீம் எப்படி இருக்கவேண்டும் என இந்திய இறையாண்மை வகுத்த வரையறைக்கு சரியான உதாரணம் அப்துல் கலாம்..
ஒரு அரசாங்க அலுவலகத்தில் ஒரு சராசரியான மத்தியவர்க்க குமாஸ்தா வின் மனநிலைதான் கலாமுடையதும். இந்திய இறையாண்மை கோடிட்ட இடத்தில் மறு பேச்சில்லாமல் கையெழுத்திட்டு ஊதியம் வாங்கியவர்.
கிண்டி குதிரை ரேஸ் கிளப் காலரியில் உட்கார்ந்துகொண்டு 'கமான், கமான்' என கத்துவார்கள். இதைத்தான் மாணவர்களிடம் இறுதிவரையில் சொல்லிக்கொண்டு சுயமுன்னேற்ற அறிவுரைகளை அள்ளி வீசினார்.வாழ்நாள் முழுவதும் மானுட குலத்திற்கு எதிரான தொழிற்நுட்பங்களை கண் மூடித்தனமாக ஆதரித்தவர். ஏவுகணை கள், அணு உலை போன்ற ஆபத்தான தொழிற்நுட்பங்களை உச்சி முகர்ந்து கொண்டாடி இந்தியாவை ''ஆயுத‌ வல்லரசு'' பாதையில் செலுத்தியவர்.ஆக அவர் வாழ்நாள் முழுவதும் செய்தது ஆயுத பூஜை. இந்த அசட்டு ஆயுத பூசைக்கு விசுவாசமாக இருந்தார். இந்த விசுவாசத்திற்கு சன்மானமாக அதிபர் பதவியும் வந்தது. இன்னும் இறையாண் மைக்கு நெருக்கமாகவும், பல நேரங்க ளில் பூசையோடு, மவுன விரதத்தை கடைபிடித்தார்.  ..இந்தியாவின் ஜனாதிபதியாக 2002 முதல் 2007 வரை பதவி வகித்தார். கொந்தளிப்பான காலக்கட்டம். இந்துத்துவா எழுச்சிப்பெற்ற நேரம்...
அவர் நினைத்திருந்தால்....
● தன் சொந்த ஊர் ராமேஸ்வரம் மீனவர்களுக்காக ஒரு ஆறுதல் வார்த்தை சொல்லியிருக்கமுடியும்.
● ஈழப் பிரச்சினையில் குறைந்தபட்சம் தன் புருவத்தை உயர்த்தியிருக்கலாம்.
● காவேரி பிரச்சினையில் தன் அதிருப்தியை புன்முறுவலுடன் வெளிக்காட்டியிருக்கலாம்.
● கோத்ரா கலவரத்தில் கொல்லப்பட்ட அப்பாவி இஸ்லாமியர்களுக்கு உதட்டை பிதுக்கியிருக்கலாம்...
ஆனால் அந்த உச்ச‌ப்ட்ச‌ பதவியில் அம‌ர்ந்துகொண்டே மவுன விரதத்தை கடைபிடித்தார்.
இறை நம்பிக்கை உள்ளவர். எளிமையானவர். ஆடம்பரத்தை வெறுக்கிறவர் என்ற அவருடைய பிம்பங்கள் ஊடகங்கள் வாயிலாக முன்னிருத்தப்பட்டது.
இதனால் அவர் ரட்சகர் என்ற அளவுக்கு ஜாக்கி போட்டு தூக்கி நிறுத்தப்பட்டார். ஆனால் மேற்சொன்ன அவருடைய இருண்ட பக்கங்களைப் பற்றி எவரும் விமர்சிக்கவில்லை...
இந்தியாவில் அனைத்து துறைகளிலும் அளவுக்கதிகமாக நாயக வழிபாடுகள் உண்டு.
அதில் கலாமும் விதிவிலக்கல்ல...!

கருத்துகள் இல்லை: