Maha luxmi -: சேலத்தில் வட இந்தியர்களின் ஆதிக்கம் அதிகம் ஆகிட்டு இருக்குன்னு முன்னவே போஸ்ட் போட்டிருந்தேன்.
சில கண்டனங்களும் வந்தது. .ஆதிக்கம் என்று நான் சொல்வது அவர்கள் இங்கு வாழ்வது அல்ல! நம் அடையாளத்தை பறித்துவிட்டு அவர்களுடைய அடையாளத்தை நிறுவுவது. .
வெளிப்பார்வைக்கு சாதாரணமாக தெரிந்தாலும் உள் இருக்கும் அரசியல் சற்று ஆபத்தானது.
சேலம் ஷங்கர் நகர் சாலையின் பெயரை ஹரே ராமா சாலை என்று மாற்றி
விட்டார்கள்.
பின் நம்மாட்கள் அதை தீவிரமாக எதிர்த்து இப்போது அது
தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்து கிருபா மருத்துவமனைக்கு எதிர் சாலை. அங்கு போர்டே வைத்துவிட்டார்கள்.
பெயர் "சேட் எக்ஸ்டென்சன்" ! இன்று புதிதாக ஒரு மேட்டர் கண்ணில் பட்டது. அது க்ளூனி ஸ்கூல் பக்கத்து
சாலைக்கு கூகுளில் "வீர சாவர்க்கர் சாலை" என்று பெயரிட்டுள்ளனர்!
அவரோட
"வீர" கதைகள்தான் உலகறிந்தது ஆயிற்றே. ஆனாலும் என்ன அழகா வரலாற்று
திரிபுகளை திணிக்கிறார்கள் பாருங்க. இன்னொரு மேட்டர் சொல்றேன்.
சங்கர் நகரில் "cow dung cakes available here" அப்டீன்னு போர்ட்
வெச்சிருக்காங்க. அதாவது மாட்டு சான கேக்கு! அடுத்து, அதுதான் கொரோனாவை.
ஒழிக்கும்ன்னு வருவானுக. தமிழகம் இதுக்கெல்லாம் கட்டுப்படாதுன்னு
நாம டயலாக் பேசிட்டு இருக்க சமயத்தில் அவன் மெல்ல ஊடுருவி பேச முடியாமல்
நம் குரல்வளையை நெறிக்க போகிறான். ஏன்னா? நேர்மையாக இருப்பவர்களுக்குதான்
எதையும் செய்ய தயக்கம் வரும். பொய்யிலேயே கட்டியெழுப்பப்பட்ட ஒரு
கும்பலுக்கு எதுவும் சாதாரணம் தான்.
இப்பவும் சொல்றேன். தெளிவா புரிஞ்சிக்கோங்க. இது குறிப்பிட்ட ஆட்கள் மீதான வன்மம் அல்ல. சக மனிதனை எப்போதும் நேசிக்கவே செய்கிறோம். அதே நேரம் அவர்களுடைய ஆதிக்க மனோபாவத்தை எதிர்க்கிறோம். அது அவசியமும் கூட.
பெயர் மாற்றம் செய்யப்பட்ட இடத்தின் மேப் லிங்க். தயவுசெய்து ரிப்போர்ட் அடியுங்கள்.
https://www.google.com/…/data=!4m2!3m1!1s0x3babf04956109cfd…
இனியாவது விழித்துக் கொள்ளுங்கள். 🙏🙏🙏
Bala Salem.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக