புதன், 29 ஜூலை, 2020

எம்.பிஃல் படிப்புகள் நிறுத்தம்: புதிய கல்விக் கொள்கை.. மும்மொழி திட்டம் (இந்தி திணிப்பு மீண்டும்)

மின்னம்பலம் : "எம்.பிஃல் படிப்புகள் நிறுத்தம்: புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல்!" யிலான மத்திய அமைச்சரவை 21 ஆம் நூற்றாண்டிற்கான புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 34 ஆண்டுகளாக கல்விக் கொள்கையில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.
இது முழு சமூகம் மற்றும் உலக கல்வியாளர்களால் வரவேற்கப்படும் என்று நான் நம்புகிறேன். புதிய கல்விக் கொள்கையில் இருக்கக் கூடிய முழுமையான அம்சங்கள் விரைவில் வெளியிடப்படும் அதன்பிறகு பத்திரிக்கையாளர்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு பதில் சொல்கிறோம்” என்று கூறினார்.
மத்திய உயர் கல்வித் துறைச் செயலாளர் அமித் கரே, “2030ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி என்பதை உறுதிப்படுத்துவதே புதிய கல்வி கொள்கையின் நோக்கம். அதன்படி, நாட்டில் எம்.ஃபில் (M.Phil) படிப்புகள் நிறுத்தப்படுவதாக புதிய கல்விக் கொள்கையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 15 ஆண்டுகளில் இணைப்புக் கல்லூரி முறை நிறுத்தப்படும். இளங்கலை - முதுகலை சேர்ந்து ஒருங்கிணைந்த படிப்பாக 5 ஆண்டுகளுக்கு படிக்கலாம்.

பொறியியல் போன்ற உயர்படிப்புகளில் ஓரிரு வருடங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பின்னர் படிப்பை தொடரலாம். இணைய வழி பாடங்கள் மாநில மொழிகளில் வெளியிடப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் மென்பொருள் உருவாக்கப்படும்.
உயர்கல்விக்கான அமைப்புகளை ஒழுங்குபடுத்த ஒரே வாரியம் அமைக்கப்படும். புதிய கல்விக் கொள்கையின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும், “புத்தகங்கள் மட்டுமின்றி செய்முறை, விளையாட்டுகள் மூலம் பாடம் கற்பிக்கப்படும், மாணவர்கள் உள்ளூர்க் கைவினைத் தொழில்களைக் கற்றுக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒரே மாதிரியாகக் கற்பிக்கப்படும். தேசியத் தேர்வுகள் முகமை சார்பில் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் மாணவர் சேர்க்கைக்கு ஒரே நுழைவுத் தேர்வு வைக்கப்படும்” என்றும் கூறினார்.
கல்வியில் மும்மொழி கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சமஸ்கிருதம் அனைத்து பள்ளி மற்றும் உயர் படிப்புகளில் விருப்பப்பாடமாக சேர்க்கப்பட்டு ஊக்குவிக்கப்படும். எந்த மொழியும் மாணவர்கள் மீது திணிக்கப்படாது என்று புதிய கல்வி கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 5ஆம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி அவசியமாகும். 8ஆம் வகுப்பு வரை தாய் மொழிக் கல்வியில் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் டிஜிட்டல் மயமாக்கப்படும், கற்றல், கற்பித்தல் மற்றும் தேர்வு முறைகளில் தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படும், இதன் மூலம் அனைவருக்கும் வாய்ப்பு கிடைப்பது உறுதி செய்யப்படும். பாடத்திட்ட சுமைகளை குறைப்பதே புதிய கல்வி கொள்கையின் நோக்கம் என்றும் புதிய கல்வி கொள்கை கூறுகிறது.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை வரைவு கடந்தாண்டு வெளியிடப்பட்டது. இதில் இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாம் மொழியாக இந்தி படிக்க வேண்டும் உள்ளிட்ட பல சர்ச்சைக்குரிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
எழில்

கருத்துகள் இல்லை: