செவ்வாய், 28 ஜூலை, 2020

சர்ச்சிலின் ஆட்சி நிர்வாகம்: கதாநாயக பிம்பம் குறித்து கேள்வி எழுப்பும் ( பார்ப்பன பனியாக்கள்) இந்தியர்கள்.. BBC

வின்ஸ்டன் சேர்ச்சில் : இந்திய பார்ப்பனர்கள் எப்போதும் மேலை நாடுகளின் ஜனநாயகம் சுதந்திரம் தத்துவம் பற்றி எல்லாம் உரத்த குரலில் பேசுவார்கள் . ஆனால் அதே பார்ப்பனர்கள் தங்கள் நாட்டில் உள்ள அறுபது கோடிக்கும் மேலான மக்களை தாழ்த்தப்பட்டவர்கள் தீண்டதகதவர்கள் என்று அந்த மக்களின் உயிர்வாழும் உருமையை கூட மறுத்தே வந்துள்ளார்கள் . அதை விட கொடுமை ஆயிரக்கணக்கான அந்த ஒடுக்குமுறையை அவர்கள் ஏற்று கொள்ளும் மனோ நிலையில் வைத்துள்ளார்கள்
BBC :யோகித்தா லிமாயே -பிபிசி :
நான் குழந்தையாக இருந்தபோது முதலில் வின்ஸ்டன் சர்ச்சில் பற்றி அறிந்து கொண்டேன். எனிட் பிளைட்டன் எழுதிய புத்தகம் ஒன்றில் வரும் ஒரு பெண் கதாபாத்திரம் விளக்கின் பிரேமில் இவருடைய படத்தை வைத்திருப்பார். `அந்த அளவுக்கு இந்த தேர்ந்த நிர்வாகியின் மீது அவருக்கு பற்றுதல்' இருப்பதால் அப்படி வைத்திருப்பார். நான் வளர்ந்தபோது, இந்தியாவில் கடந்த கால காலனியாதிக்கம் பற்றி நிறைய உரையாடி இருக்கிறேன். போர்க்கால பிரிட்டிஷ் பிரதமரைப் பற்றி, முற்றிலும் மாறுபட்ட கருத்து என் நாட்டில் பெரும்பாலான மக்களிடம் இருப்பதை நான் அறிந்து கொண்டேன்.காலனி ஆட்சிக் காலம் பற்றியும் மாறுபட்ட கருத்துகள் உள்ளன.
சர்ச்சிலின் ஆட்சிரயில் வசதி உருவாக்கியது, தபால் சேவைகள் உருவாக்கியது போன்ற பல நல்ல விஷயங்களை இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் உருவாக்கியதாக சிலர் கூறுவார்கள். ``தங்களின் சொந்த தேவைகளுக்காக அவற்றை எல்லாம் அவர்கள் செய்தார்கள். அவர்கள் இந்தியாவை ஏழையாக்கிவிட்டனர். இந்தியாவைக் கொள்ளையடித்து விட்டனர்'' என்பது மற்றொரு தரப்பாரின் கருத்தாக உள்ளது. ``கொடுமைக்கார பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு'' எதிராக போராட்டங்களில் பங்கேற்றதைப் பற்றி எனது பாட்டி எப்போதும் பெருமையுடன் சொல்லிக் கொண்டிருப்பார்.
>இவ்வளவு கோபம் இருந்தாலும், மேற்கத்திய விஷயம் எதுவாக இருந்தாலும், வெள்ளைத் தோல் உள்ளவர்கள் எதைச் செய்தாலும் அல்லது சொன்னாலும் அவை இந்தியாவில் மேன்மையானவையாகக் கருதப்படுகின்றன என்பதை நான் வளரும் போது கவனித்தேன். பல தசாப்த காலங்கள் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்த போது, இந்திய மக்களின் தன்னம்பிக்கை செல்லரித்துப் போய்விட்டது... சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகளில் பல மாற்றங்கள் நடந்துவிட்டன. புதிய ஒரு தலைமுறை உருவாகிவிட்டது. உலகில் நமக்கான இடத்தை உறுதிப்படுத்தக் கூடியவர்களாக அவர்கள் உள்ளனர். 1943ல் ஏற்பட்ட வங்காளத்தின் பஞ்சம், பட்டினி போன்ற, காலனி ஆதிக்கத்தின் கருப்பு அத்தியாயங்கள் பற்றி ஏன் பரவலாக பேசப்படவில்லை, ஏன் கண்டனங்கள் எழவில்லை என இந்தத் தலைமுறையினர் கேள்வி எழுப்புகின்றனர்.
குறைந்தது 3 மில்லியன் பேர் பஞ்சம், பட்டினியால் மாண்டு போனார்கள். இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் ராணுவத்தில் ஏற்பட்ட மரணங்களைவிட இது ஆறு மடங்கு அதிகம். ஆனால், போரின் வெற்றி மற்றும் தோல்விகள் ஆண்டுதோறும் நினைவுக் கூறப்படும் நிலையில், பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த வங்காளத்தில் அதே காலத்தில் ஏற்பட்ட பட்டினி ஏறத்தாழ மறக்கடிக்கப் பட்டுவிட்டது.

கருத்துகள் இல்லை: