செவ்வாய், 28 ஜூலை, 2020

தமிழ்நாடு - நூற்றாண்டு கால சமூகநீதி மண்.

Suriya Krishnamoorthy.: இது நூற்றாண்டு கால சமூகநீதி மண் என்று அவ்வப்போது எழுதும்போதும், பேசும்போதும், இப்படியெல்லாம் வீராப்புக்காக எழுதுகிறோமோ.
இடஒதுக்கீட்டால் பயன்பெற்ற, சமூகத்தில் பெரும்பகுதி மக்களுக்கு இடஒதுக்கீடு குறித்த நேர்மறையான அணுகுமுறை இல்லாத காலத்தில், இதை சமூகநீதியில் பண்பட்ட மண் என்று சொல்லவதன் வழியே நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோமோ என்றெல்லாம் தோன்றும்.
இன்றைக்கு உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் ஆவணத்தை படிக்கும்போது, அப்படி எழுதுவதில் எந்த தவறும் இல்லை என்று அழுத்தமாக தோன்றியது.
மொத்தம் பதிமூன்று வழக்குகள்.
திமுக, அதிமுக, திக, பாமக, மதிமுக, சி.பி.ஐ, சி.பி.ஐ.எம், நாதக, தமிழ்நாடு அரசு, இரண்டு மருத்துவர்கள், புதுச்சேரி தொடர்பில் இரண்டு வழக்குகள். எதிர் தரப்பில் மத்திய அரசு மற்றும் எம்.சி.ஐ.state specific reservation வேண்டும் என்று 12 வழக்குகள். -
மத்திய அரசின் இடஒதுக்கீடு கொள்கை அடிப்படையில் 27% வேண்டும் என்று பா.ம.க வின் வழக்கு. அரசியலமைப்பு சட்டம், உச்சநீதிமன்ற / உயர்நீதிமன்றங்களின் பல்வேறு வழக்குகளின் தீர்ப்புகள், MCI விதிகள், தமிழ்நாடு அரசின் 1993 ஆம் ஆண்டு சட்டம் என்று மிக விரிவாக திமுக வழக்கறிஞர் வில்சன் வாதிட்டிருக்கிறார்.
முடிவில் state specific reservation வேண்டும் என்பது அவருடைய வாதம். பெரும்பாலும் ஏனைய அனைத்து தரப்புகளும் வில்சன் அவர்களை முன்மொழிந்து கூடுதல் தகவல்களை சேர்த்திருக்கிறார்கள். தமிழ்நாடு அரசு தரப்பில் திரு. விஜய் நாராயணா விரிவாக வாதிட்டிருக்கிறார்.

"திமுக" வழக்கறிஞர் வில்சன் அவர்களின் வாதங்களை வழிமொழிந்து, கூடுதலாக "state specific reservation but 50% slab" என்கிற மத்திய அரசின் பிரமான பத்திரம் ஏற்க முடியாதது. தமிழ்நாட்டரசின் 69% ஒதுக்கீடு சட்டபாதுகாப்பை பெற்றது அதனால் 50% slab என்பதை அனுமதிக்கக்கூடாது என்று வாதிட்டிருப்பவர் "அதிமுக" வழக்கறிஞர் சுந்தரேசன்.

திகவும், மதிமுகவும், இரண்டு கம்யூனிஸ்ட்களும், தனிநபர்களின் வழக்கறிஞர்களும் வில்சன் அவர்களை வழிமொழிந்து முடித்திருக்கிறார்கள்.

நாதக வும் வில்சன் உள்ளிட்ட பிறரின் வாதங்களை முன்மொழிந்தே முடித்திருக்கிறார்கள்.

**
- மத்திய அரசின் வாதங்களை எதிர்க்கும் மாநில அரசு

- திமுகவின் வாதத்தோடு தனது தரப்பையும் கூடுதலாக சேர்க்கும் அதிமுக.

- deny of reservation to obcs is hitting at the root of the promise of reservartion என்று சாதி அடிப்படையிலான சமூகநீதிக்காக வாதிடும் சி.பி.ஐ.எம்.

- there is no surrender of seats and it is only a contribution to the AIQ என்று மாநில உரிமை பேசும் சி.பி.ஐ

-மாணவர் சேர்க்கை முகமை தான் நீங்கள், கல்லூரி இடங்கள் எங்களுடையது என்று உரிமையை முன்வைத்து மத்திய அரசை எதிர்க்கும் பாண்டிச்சேரி வழக்குகள்

- இவர்கள் தரப்போடு சேர்ந்து வாதிடும் நாதக.

இவர்கள் எல்லோரும் சேர்ந்து மத்திய பாஜக அரசை நீதிமன்றத்தில் அம்பலபடுத்தியிருக்கிறார்கள் என்று சொல்லுகிறேன்

கேட்டுக்கொண்டே இருந்த நண்பர்.. இது கோர்ட் ரூம் இல்ல, விக்ரமன் சார் படம் என்று சிரித்துவிட்டு போகிறார்.

**
உண்மையில், "சமூகநீதிக்கு எதிரானவன் நான்" என்று அறிவித்துவிட்டு எந்த சக்தியும் இங்கே வேர்விட்டு நின்றுவிட சாத்தியமில்லை என்பதற்கு சான்றுகள் இவையெல்லாம்.

இதற்கு அழுத்தமான மற்றொரு சான்று தான், தீர்ப்பு வந்த அடுத்த சில மணி நேரத்தில், இது எங்கள் வெற்றி என்று பாஜக சொன்னது.

இன்றைய ஒருமித்த குரல்களின் வேர்களை கொஞ்சம் தேடிப்போனால், நீதிக்கட்சியின் பார்ப்பனரல்லாதார் கொள்கை பிரகடனத்தில் போய் நிற்கும். அதனால் தான் சொல்லுகிறோம்

தமிழ்நாடு - நூற்றாண்டு கால சமூகநீதி மண்.

கருத்துகள் இல்லை: