வியாழன், 30 ஜூலை, 2020

புலிகளின் அழிவுக்கும், தமிழ் மக்களின் அழிவுக்கும் யார் ....? சமுகவெளியில் அனல் பறக்கும் .....

Jeevan Prasad புலிகளின் அழிவுக்கும், தமிழ் மக்களின் அழிவுக்கும் யார்
காரணம்?
ராஜீவ் காந்தி , ஜேஆரோடு சேர்ந்து 13வது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தார். வடக்கு - கிழக்குக்கு சுயநிர்ணய உரிமை வரையிலான மாகாண ஆட்சியை பெற்றுக் கொடுத்தார்கள் .
அதை புலிகள் எதிர்த்து இல்லாமலாக்கிக் கொண்டார்கள். ராஜீவ் காந்தியையும் படுகொலை செய்தார்கள்.
பிரேமதாச , இது அண்ணன் - தம்பி சண்டை என இந்திய படைகளுக்கு எதிராக போராட புலிகளுக்கு பணமும் ஆயுதமும் வழங்கினார். இந்தியா வெளியேறியதும் தனிநாட்டைத் தவிர பிரபாகரன் எதைக் கேட்டாலும் தருகிறேன் என்றார். அதையும் எதிர்த்தார்கள். பிரபாகரனுக்கு இலங்கை இராணுவத்தில் பெரிய பதவி ஒன்றைக் கூட தான் தயாராக இருப்பதாக ஒருமுறை சொன்னார். அதையும் கண்டு கொள்ளவில்லை. இறுதியில் பிரேமதாசவையும் படுகொலை செய்தார்கள்.
சந்திரிகா ஒரு நல்ல தீர்வை கொண்டு வர முயன்றார். அதுவே சிறந்த தீர்வு என பலர் இப்போதும் பேசுகிறார்கள். சந்திரிகாவை கொல்ல முயற்சி செய்தார்கள். கண் போனது. உயிர் போகவில்லை. அந்த தீர்வை வரைந்த நீலன் திருச் செல்வத்தை கரும்புலிகள் மூலம் படுகொலை செய்து அதையும் இல்லாமல் செய்து கொண்டார்கள்...
 ரணில் , பிரபாவோடு ஒரு ஒப்பந்தத்தை செய்தார். அதில் தமிழ் பகுதிகளுக்குள் போலீசார் போக தடை விதித்தார். இராணுவத்தை முகாமுக்குள் முடங்கச் சொன்னார். ஆனால் புலிகளுக்கு நாட்டில் எந்த பகுதிக்கும் சென்று வர அனுமதியளித்தார். கொழும்பில் காரியாலயம் ஒன்று அமைக்க புலிகளுக்கு அனுமதி வழங்கினார்.
வடக்கில் பலமான வானோலி நிலையம் ஒன்றை உருவாக்க நோர்வேயிலிருந்து உபகரணங்களை கொண்டு வர அனுமதியளித்தார்.
ஆனால் புலிகள் தென் பகுதியில் இருந்த புலி எதிர்ப்பாளர்களை வேட்டையாடுவதற்கே அதை பாவித்தார்கள். அதற்கு மேல் வேறு எதற்கும் அவர்கள் முனையவில்லை. இறுதியில் ரணிலின் ஆட்சியை சந்திரிகா இல்லாமல் செய்தார்.
ரணிலின் ஆட்சி கவிழ்ந்தது. ரணிலின் ஆட்சியை கவிழ்க்க பலமான அழுத்தத்தை அன்றைய ஜேவீபீதான் கொடுத்தது.

  மகிந்தவோடு ரகசிய உடன்பாடு ஒன்றுக்கு புலிகள் வந்து பல மிலியன்கள் பணமும் உதவிகளும் பெற்று ரணிலுக்கு கிடைக்க வேண்டிய தமிழர் வாக்குகளை கிடைக்காமல் பண்ணிய புலிகள் , ரணிலை தோற்கடித்தார்கள். மகிந்த வென்றார். மகிந்த போரை நிறுத்துங்கள். நாம் பேசித் தீர்க்கலாம் என்றார். பிரபாகரனோடு தானே நேரடியாக பேச விரும்புவதாகவும் சொன்னார். பிரபாகரனால் வர முடியாவிட்டால் தானே வந்து சந்திப்பதாகக் கூட பகிரங்கமாக சொன்னார். அதையும் தட்டிக் கழித்து மாவிலாறு அணையை மூடி அடிபட்டார்கள். கடைசியில் மகிந்த புலிகளை கூண்டோடு அழித்தார். புலிகளோடு அப்பாவி மக்களும் அழிந்தார்கள்.

👊 இப்ப சொல்லுங்க இத்தனை அழிவுக்கும் தோல்விக்கும் யார் காரணம்?

இது நான் முன்னர் எழுதியது. இக் காலத்தில் சிலரை சிந்திக்க வைக்க மறுபதிவாக பதிகிறேன்.

முகநூல் பதிவு .. பின்னூட்டங்கள் :
Jeevan Prasad ஒட்டுக் குழுக்களை விட புலிகளுக்குள் இருந்தோர்தான் அதிகமாக அரசுக்கு தகவல் வழங்கினார்கள்.

Jo Stan : நீர் என்ன பக்கத்தில இருந்து பார்த்தனீரோ?. விடுதலை போராளிகளை இழிவு படுத்துவதில் உன்னை போன்ற தமிழின துரோகிகளுக்கு எப்போதும் குஷி தான். எதிரியைவிட போராளிகளை இழிவு படுத்தும் உன்னை போன்ற தமிழின துரோகிகளை முதலில் இல்லாமல் ஆக்கி களை எடுக்க வேண்டும்..உனக்கு நல்லகாலம் இப்போ நடக்குது என்று எண்ணிகொள்...இல்லையேல் உன் நிலமை வேறாக அமைந்திருக்கும்.

Jeevan Prasad : புலிகளை இழிவு படுத்தவில்லை. உண்மையை சொல்லியுள்ளேன். புலிகளது முக்கிய பிரமுகர்கள் கேபி - கருணா - பிள்ளையான் முதற் கொண்டு அநேகர் இன்று அரசோடு இருக்கிறார்கள். புலிகளில் இருந்த அநேகர் புலனாய்வு துறையோடுதான் உள்ளனர். நான் எழுதியது உங்களை போன்ற அறிவாளிகளால்தான் முள்ளிவாய்க்கால் அவலம் நிகழ்ந்தது என்பதைத்தான். ஏதாவது உண்மைகளை சொன்னால் ஏற்றுக் கொள்ளாமைதான் புலிகளின் பெரும் பலவீனம். பொய்யான ஆலோசனைகள் மற்றும் உசுப்பேத்தல்களே புலிகளின் அழிவுக்கு காரணம்.

Jeevan Prasad : புலி ஆதரவாளர்களது ஒரு பெரிய நோய் எடுத்ததும் உங்கள்கருத்தை முன் வைக்காமல் எல்லோருக்கும் துரோகி பட்டம் கட்டுவது. நீங்கள் என்ன பல்கலைக் கழகமாநடத்துறீங்கள்? உங்களை போன்றோரை நான் என் நட்பில் நுழையக் கூட விடுவதில்லை. ஏன் என்றால் தங்கள் தரப்பு நியாயங்களை பேசத் தெரியாமைதான்.

Raguparan Thirulingeswaran : விடுதலைபுலிகள் எந்ததவறும் மறந்தும் கூட செய்யாத தேவதூதர்கள் என நம்பும் மனநோய் சிலருக்கு உண்டு, புலிகள் பற்றி வாய் திறக்கும் முதல் துரோகி என ஆரம்பித்து கெட்டவார்த்தை அர்ச்சனையில் முடிப்பார்கள்

Noel Praveen Kumar : புலிகள் ஒன்றும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. அவர்கள் செய்திருக்க கூடிய தவறுகள் சுட்டி காட்ட படாமல் அவர்கள் என்னத்தை செய்திருந்தாலும் அதனை போற்றி புகழும் Jo Stan போன்றவர்கள் தான் அவர்களின் அழிவுக்கு காரணம். நடந்து முடிந்த தவறுகள் சுட்டி காட்ட படுவது அவை மீண்டும் எதிர்காலத்திலும் நடக்க கூடாது என்பதற்காகவே. தமிழ் மக்கள் மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால சந்திக்க தயாரில்லை.

கருத்துகள் இல்லை: