திங்கள், 27 ஜூலை, 2020

இயற்கை வளங்கள் மீது போர் . EIA 2020ஐ மத்திய அரசே திரும்பப் பெறு. வீடியோ ..


பா. ஜீவ சுந்தரி : நாட்டின் எந்தவொரு ஒரு குறிப்பிட்ட பகுதியில் வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கென மரங்களை வெட்டுவதற்கோ அல்லது மலைகளையே பெயர்த்தெடுத்து அப்புறப்படுத்த வேண்டுமென்றாலோ இனிமேல் மக்களின் கருத்தையோ, சம்பந்தப்பட்ட ஆய்வாளர் களின் ஆலோசனைகளையோ பெறத் தேவையில்லை என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு - 2020ஐ மக்கள் விரோத மத்திய அரசே திரும்பப் பெறு...
இது நிறைவேறினால், யாருடைய நிலமும் பறிக்கப்படும், எட்டு வழிச் சாலை என்ன, 18 வழிச் சாலைகள் கூட எளிதாகக் கட்டமைக்கப்பட்டு விடும். மலைகள் அகழ்ந்து கெல்லி எறியப்படும். சுற்றுச்சூழல் முற்றிலுமாகச் சிதைத்து அழிக்கப்படும். நம் இயற்கை ஆதாரங்கள் அனைத்தும் அம்பானி, அதானிகளுக்குத் தாரை வார்க்கப்படும்.
மக்களுக்கு எதிராகவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த பா.ஜ.க. ஆட்சியில், நாடு முழுமையாக - இயற்கை வளங்கள் உட்பட - தாரை வார்க்கப்படும் அபாய காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை ஒவ்வொரு கணமும் சிந்தனையில் கொண்டு இவர்களின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

மக்கள் மேலும் மேலும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய நிலை என்பதை உணருங்கள். உணர்ந்து செயல்படுங்கள். கொரோனாவின் பெயரால் மக்களை வீட்டுக்குள் முடக்கி வைத்து விட்டு தங்களுக்குச் சாதகமான அனைத்தையும் செய்து செய்து கொண்டிருக்கிறது மோடியின் மோசடி அரசு.
மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம். அரசே... இந்த நாசகரத் திட்டத்தைத் திரும்பப் பெறு

கருத்துகள் இல்லை: