திங்கள், 27 ஜூலை, 2020

சீமான் கைது? விஜயலட்சுமி வாக்குமூலத்தால் வழக்கு பாயுமா??

ஆர் எஸ் எஸ் பின்னணியில் உள்ள சீமானை கைது செய்ய தயங்கும் போலீசார்
வெப்துனியா :  நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயற்சித்து மருத்துவமனையில் உள்ளதால் சீமானுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.விஜய் நடித்த பிரண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. மேலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சீமான் குறித்து சமூக வலைத்தளத்தில் வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.இதனை அடுத்து தற்போது ஒரு வீடியோ வெளியிட்டு தான் தற்கொலை செய்யப் போவதாகவும் தன்னுடைய மரணத்திற்கு பின்பு யாரும் சீமானை விட்டுவிட வேண்டாம் என்றும் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.தன்னை சீமானும் அவரைச் சேர்ந்த கட்சியினரும் மிகுந்த டார்ச்சர் செய்வதாகவும் இந்த டார்ச்சரை தன்னால் சமாளிக்க முடியவில்லை என்றும் அதனால் தற்கொலை செய்யப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது அடையாறு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவு பெருகியுள்ளது. சக நடிகைகள் கஸ்தூரி, காயத்ரி ரகுராம் ஆகியோர் உதவிகரம் நீட்டியுள்ளனர்.மேலும், சமூக வலைத்தளமான டிவிட்டரில் #Vijayalakshmi என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. பலரும் சீமானுக்கு தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என கோரிவருகின்றனர்.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் தீயாக பரவிய நிலையில், இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தற்போது நடிகை விஜயலெட்சுமியிடம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் விஜயலட்சுமியின் வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளதாவும் எனவே இதனை பொருத்து சீமான் மற்றும் ஹரி நாடார் மீது நடவடிக்கை பாய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 

கருத்துகள் இல்லை: