Don Ashok -Ashok.R இலங்கையில்
இரண்டு மொழிகள்தான் அதிகம் பேசப்படுபவை. ஆனால் உள்நாட்டுப் போர், பிரிவினை
என நாடும் மக்களும் நிம்மதியிழந்து நாசமாய்ப் போனார்கள்.
ஆனால் தமிழ்,
வங்கம், தெலுகு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 20க்கும் மேலான மொழிகள்
இருந்தும், ஆயிரம் வேறுபாடுகள் இருந்தும் இந்தியா உள்நாட்டுப்போரை
சந்திக்காமல், உடையாமல் இருக்கக் காரணம் நேரு போன்ற சோஷியலிஸ்ட்டுகளிடம்
வெள்ளைக்காரன் இந்தியாவைக் கொடுத்துவிட்டுப் போனதுதான். 1947ல் மோடி போல ஒரு பிரதமர் இருந்திருந்தால் இந்தியா இன்னொரு சோமாலியா+இ லங்கை ஆகியிருக்கும்.
இந்தியா என்பது ஒரு மண்பானை. அதை ஓரளவுக்கு டெல்லி ஓங்கித் தட்டலாம்,
அதுவும் தாங்கும். மாநிலங்களில் இருந்து எதிர்ப்பு வந்தால் கொஞ்சம் அடக்கி
வாசிப்பார்கள்.
வாஜ்பாய் காலத்தில் கூட அப்படித்தான். ஆனால் மோடி அரசு முழு
வலதுசாரி சாடிச அரசு. மிருக பலத்துடன் இருக்கிறோம் என்கிற திமிரில்
மிருகத்தனமாக அந்த மண்பானையை தட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
எதிர்ப்பெல்லாம் அவர்கள் காதில் விழுவதாகவே இல்லை. வலதுசாரிகளால் எதையுமே
பத்திரமாக வைத்துக்கொள்ள முடியாது. ஜனநாயகத்தன்மை இல்லாமல் இந்தியா போன்ற
ஒரு நாட்டை ஆள்வது தற்கொலைக்குச் சமம். அதைத்தான் GST, நீட், CAA, 370
நீக்கம், புதிய கல்விக்கொள்கை என அடுத்தடுத்து செய்துகொண்டிருக்கிறது பாஜக
அரசு..
வரலாற்று ரீதியாக, இன ரீதியாக தென்னிந்தியாவிற்குச் சம்பந்தமே
இல்லாத டெல்லி, தென் மாநிலங்களின் கல்விக் கொள்கையை முடிவு செய்யும்
என்றால் இது பச்சையான காலனி ஆதிக்கமில்லையா?
குறிப்பாக தமிழகம், வட இந்திய மாநிலங்களால் கனவுகூட காண முடியாத சாதனைகளை எல்லாம் கல்வித்துறையில் ஏற்கனவே நிறைவேற்றிவிட்ட ஒரு மாநிலம். அதன் கல்வியை நிர்ணயம் செய்ய வடக்குக்கு குறைந்தபட்சம் என்ன தகுதி இருக்கிறது? 5ஆம் வகுப்பில் ஃபெயில் ஆனவன் எல்லாம் ஒன்றுகூடி 12ஆம் வகுப்பு வாத்தியாருக்கு பாடம் எடுத்த கதையாக அல்லவா இருக்கிறது!!!
சுற்றுச்சூழல் பிரச்சினை பற்றி பேச ஆரம்பிப்பதற்குள் புதிய கல்விக்கொள்கை எனும் அடுத்த குண்டை பாஜக போட்டிருக்கிறது. கொரொனா நோயால் பயன்பெறும் ஒரே கூட்டம் இந்த பாஜக கூட்டம்தான்.
குறுகிய நோக்கில் இதை வலதுசாரிகள் பெரிய அரசியல் வெற்றியாக நினைத்து அனுபவித்துக் கொள்ளலாம். ஆனால் அவர்கள் நுனிக்கிளையில் அமர்ந்து அடிக்கிளையை வெட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. காலம் அதை உணர்த்தும்.
-டான் அசோக்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக