வியாழன், 11 ஜூலை, 2019

வைரமுத்து வாரிசு கவிஞர் மதன் கார்க்கி போடும் கொத்து பரோட்டா... லிரிக்_இஞ்சினியரிங்...

Kathir RS : டிக்டிக்டிக் படம் வெற்றி பெற்றிருக்கிறது.(இரண்டாவது வாரமும் அரங்கு நிறைந்த காட்சிகளாக க்ரோம்பேட் வெற்றியில் ஓடிக் கொண்டிருக்கிறது.)
எல்லா அப்பாக்களும் தங்கள் மகன்களுடன் சென்று பார்த்த ஒரு படமாக இருக்கிறது டிக்டிக்டிக்.
வாழ்த்துகள்.
ஆனால் இந்த பதிவு படத்திற்காக அல்ல. படத்தின் பாடலாசிரியர் அன்பு அண்ணன் கார்க்கி அவர்களுக்காக.
அப்பா கொடுத்த கிக் ஸ்டார்ட்டில் பாட்டெழுத வந்தவர்.
அப்பாவை மிஞ்சிவிட வேண்டும் என முக்க முக்க அவரது மக்குத்தனம் பல்லிளிக்கிறது.
அப்பாவின் அறிவு புத்தகங்கள் டேட்டா பேஸ் சங்கத்தமிழ் அகராதி பத்தாதற்கு கூகுள் போன்றவற்றை வைத்துக்கொண்டு இவர் போடும் கொத்து பரோட்டாவிற்கு பெயர் #லிரிக்_இஞ்சினியரிங்.
பற்றாக்குறைக்கு திரைப்பட டப்பிங் துறையையும் குத்தகைக்கு எடுத்துக் கொண்டுவிட்டார்.
அவ்வப்போது தமிழ் எழுத்துக்களை சீர்திருத்தம் செய்யப்போவதாக திகிலூட்டுகிறார்.
கடந்த பத்தண்டுகளில் அவர் பல பாடல்களை எழுதிவிட்டார்.

சங்கர் போன்ற பெரிய இயக்குநர்களுக்கு கூட பாடல்கள் எழுதியிருக்கிறார்.
அவர் எழுதிய பாடல்களில் சிலவற்றை பார்ப்போம்:
இரும்பிலே ஒரு இருதயம் முளைத்ததோ.
ஷட் அப் யுவர் மௌத் உன் சட்டி பான கௌத்
என் கையை கோர் எவ்வனா
கூகுள் கூகுள் பண்ணிப்பாத்தேன்
இப்படியாக வந்து..
தற்போது டிக்டிக்டிக் கில் மூன்று மரண மொக்கை பாடல்களை டெலிவரி செய்திருக்கிறார்.
எவ்வத்தின் நுதி காண
விண் வீரா விண் வீரா
குறும்பா..
இவர் வைரமுத்துவின் வாரிசாக அன்றி சாதாரண ஆளாக இருந்திருந்தால் இந்த எழுத்துகள் வாசலுக்கு வெளியே விசிறி அடிக்கப்பட்டிருக்கும்.
இவரது எழுத்துக்கள் அப்பட்டமான மோசடி வேலை..ஏமாற்று வேலை..
இதற்கு அவர் வைத்திருக்கும் பெயர்தான் லிரிக் இஞ்சினியரிங்..
எத்தனையோ கவிஞர்கள் வாய்ப்பு கிடைக்காமல் செத்து சுண்ணாம்பு ஆகிக் கொண்டிருக்கிறார்கள்..
இங்கே இவர் சுயப் பீற்றல் செய்து கொண்டு திரிகிறார்.
பாடலில் வரும் சொற்கள் கற்களல்ல..இஞ்சியரிங் செய்ய!!
அவை இதயத்திலிருந்து ஆழ் மனதிலிருந்து அல்லது பண்பட்ட மொழியறிவிலிருந்து வர வேண்டியவை..
சிலர் கேட்கலாம்.. என்ன சார்..பாட்டெல்லாம் நல்லாதானே இருக்கு..?
அவர்களுக்கு சில அடிப்படை தகவல்களை சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்.
காலங்காலமாக தமிழ் திரைப்பட பாடல் வரிகள் பல மௌனப் புரட்சிகள் செய்து வளர்ந்திருக்கின்றன.
கிருஷ்ணா முகுந்தா,
பூமியில் மானிட.. தொடங்கி
வாராய் நீ வாராய்
வாழ்க்கையெனும் ஓடம்
தாழையாம் பூ முடிச்சு
பொன்மாலைப் பொழுது
வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
செம்பூவே
சல சல சல இரட்டை கிளவி
ஆனந்த யாழை மீட்டுகிறாய்
தெய்வங்களெல்லாம் தோற்றே போகும்
வரை தமிழ் திரைப்பட பாடல்களை கவனித்தால் அது எப்பேர்பட்ட உயர்ந்த நிலையை தரத்தை தொட்டிருக்கிறது என்பது புலனாகும்.
கவிஞர் மருதகாசி கலைஞர் பட்டுக்கோட்டை கண்ணதாசன் வாலி வைரமுத்து டி. ராஜேந்தர் அறிவுமதி நா.முத்துகுமார் இப்படி ஒவ்வொருவரும் திரைப்படப்பாடல்களில் தமிழின் தரத்தை மக்களின் ரசனை உணர்வை உயர்த்திக் கொண்டே சென்றனர்.
ஆனால் தமிழக பட்டி தொட்டிகளில் வாழும் குப்பன் சுப்பனைக் கூட தமிழின் இனிமைபற்றி பேச வைத்த வைரமுத்துவின் வாரிசு பாடல் எழுதுவதை வெறும் வார்த்தை குலுக்கல் என்கிறது.
இவரது மட்ட ரக பாடல்கள் அவை தழுவியிருக்கும் இசையால் வெற்றியும் பெற்று தவறான முன்னுதாரணங்களாகிக் கொண்டிருக்கின்றன.
சுருக்கமாகச் சொன்னால் ஒரு சில புதிய சொற்களை கூகுளில் தேடி கண்டு பிடித்து ட்யூனில் ஃபிட் செய்துவிட்டு அண்ணன் மற்ற வரிகளில் ஓபி அடிக்கிறார்..
குறும்பா பாடலை வரிக்கு வரி படித்து பாருங்கள்..(அதை பாடிய பாடகரைப் பற்றி தனியாக எழுத வேண்டும் ..கொலை..)
//விண்வீரா விண்வீரா விண்வீரா//
இதெல்லாம் ஒரு திரைப்பாடலுக்கு பல்லவியா? அல்லது ஏதும் நர்சரி பாடல் எழுதும் முயற்சியா ?
//எவ்வத்தின் நுதி காண..//
என்ன எழவுடா? என்றால் சங்க இலக்கிய சொற்களாம்.. சரி..பொருள் என்ன..?அதற்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் ..?சரி அதைக் கூட விடுங்கள ..
அந்த இரண்டு வரியை விட்டு விட்டு மீதி வரிகளைப் பாருங்கள்..
//சொட்டு சொட்டென காலத்துளியா..//
//விண்கல் வருவதா//
//மொழி இன பேதம் //
மண்ணாங்கட்டி தெருப்புழுதி யென போற வர எல்லாத்தையும் வழிச்சி போட்டுட்டுட்டு போயிருக்காரு "லிரிக் இஞ்சினியர்.."
எந்த சொல்லுடனாவது கனெக்ட் ஆக முடிகிறதா என்றால் இல்லை..
//என் கையை கோர் எவ்வனா//
இந்த வரிகளை பாருங்கள்...
//யாரோடும் சொல்லாத மூவேழில் கொள்ளாத அச்சங்கள் கொண்டாடுதே//
எதாச்சும் புர்தா?
//கூகுள் கூகுள் பண்ணிப்பாத்தேன் உலகத்துல உன்ன போல ஒரு கிறுக்கனும் பொறக்கவில்ல..//
இது என்ன எழவு?எனி லாஜிக்??
//ஷட் அப் யுவர் மௌத்..
உன் சட்டி பான கவுத்...(???)//
'கவுத்' என்ன கான்டெக்ஸ்ல இந்த சொல் வருது.. தமிழ்ல அப்படி ஒரு சொல் இருக்கா?
படத்தில் அந்த சொல் ஒலிக்கும் போது பெண்கள் பின்புறத்தை காட்டுகிறார்கள்...
//இரும்பிலே ஒரு இருதயம்..//
ஒரு இருதயம்னு வருமா ஓர் இருதயம்னு வருமா?
ரோபோ இரும்புல பண்ணதில்ல நிக்கல் ல பண்ணதுன்னு படத்துலயே ஒரு டயலாக் வரும்..
இப்படி பாட்டெழுதச் சொன்னா செங்கல் செங்கல்லா எடுத்து வச்சு தமிழுக்கு சமாதி கட்டும் வேலையைச் செய்யும் இந்த இஞ்சினியர்....தயவு பண்ணி பாட்டெழுதுறத நிறுத்திட்டு வேற பொழப்ப பாத்தா திரைப்படங்களில் தமிழ் தப்பி பிழைக்க வழியுண்டு!
நன்றி
Kathir RS

கருத்துகள் இல்லை: