திங்கள், 8 ஜூலை, 2019

கனிமொழி வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார் தமிழிசை சவுந்தரராஜன்

கனிமொழிகனிமொழி வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார் தமிழிசை சவுந்தரராஜன்மாலைமலர்: தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி தமிழிசை சவுந்தரராஜன் வழக்கு தொடர்ந்துள்ளார். கனிமொழி வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார் தமிழிசை சவுந்தரராஜன் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை: பாராளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிட்டார்.
அவரை எதிர்த்து மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட்டார். இந்த தேர்தலில் கனிமொழி 3.47 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.பி. ஆக பதவியேற்றார். கனிமொழி தேர்தல் நடந்து கிட்டத்தட்ட 3 மாதம் ஆன நிலையில், கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்து தமிழிசை சவுந்தரராஜன் இன்று வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் இதற்கான மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார்.
தேர்தல் பிரசாரத்தின் போது ஆரத்தி எடுத்தவர்களுக்கு திமுக தரப்பில் பணம் கொடுக்கப்பட்டதாக தனது மனுவில் தமிழிசை குற்றம்சாட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை: