ஞாயிறு, 7 ஜூலை, 2019

நாகாலாந்துக்கு தனி பாஸ்போர்ட், தனி கொடி... ஒப்புக் கொண்டது மத்திய அரசு?

Centre approves separate Passport, Flag for Nagaland tamil.oneindia.com - mathivanan-maran :
டெல்லி:நாகாலாந்து மாநிலத்துக்கு தனி பாஸ்போர்ட் மற்றும் தனி கொடி பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
நாகாலிம் அல்லது அகன்ற நாகாலாந்து கோரி ஆயுதப் போராட்டம் நடத்திய நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (ஐசக்- மூய்வா) பிரிவுடன் மத்திய அரசு 2015-ம் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால் இந்த ஒப்பந்தம் 4 ஆண்டுகளாக இறுதி செய்யப்படாமலேயே இருந்து வந்தது. இதனிடையே நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சர் கிலோ கிலோன்சர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, இந்தியா-நாகாலாந்து இடையேயான பிரச்சனைகளுக்கு தீர்வு காண மத்திய அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது.

1) நாகாலாந்துக்கு தனி அரசியல் சாசனம் 2) நாகாலாந்து தனிக்கொடி 3) நாகாலாந்துக்கு தனி பாஸ்போர்ட், 4) ஐநாவில் நிரந்தர பிரதிநிதி 5) கூட்டான வெளியுறவு கொள்கை 6) கூட்டான ராணுவ பயிற்சி நடவடிக்கை 7) நாகா ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துவது 8) நாகா இன மக்கள் வசிக்கும் பகுதிகளை நிர்வகிக்கும் அரசு ஆகியவற்றை மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை: