செவ்வாய், 9 ஜூலை, 2019

துர்கா ஸ்டாலின்.. பயபக்தியுடன் அத்தி வரதர் தரிசனம்.. மலர்ச்சரம் பெற்றார்

Durga Stalin prayed in Athi Varadar Kanchipuram Durga Stalin prayed in Athi Varadar Kanchipuram tamil.oneindia.com/authors/hemavandhana: சென்னை: திமுக தலைவா் ஸ்டாலினின் மனைவி துா்க்கா ஸ்டாலின் காஞ்சிபுரம் அத்திவரதரை விஐபிக்களுக்கான சிறப்பு வழியில் வந்து தரிசனம் செய்துவிட்டு பயபக்தியுடன் மலர்சரம் பெற்று சென்றார்.
திமுக தலைவர் முக ஸ்டாலினின் மனைவி, துர்கா ஸ்டாலின் ஆன்மீகத்தில் ரொம்பவும் ஈடுபாடு கொண்டவர். இதனால் அடிக்கடி கோயிலுக்கு சென்று வருவார். அவர் எப்போதெல்லாம் கோவிலுக்கு செல்கிறாரோ அப்போதெல்லாம் அது சம்பந்தமான போட்டோக்கள் இணையத்தில் உலா வரும். ஆனால் கூடவே "இதுவா திமுகவினரின் பகுத்தறிவு கொள்கை" போன்ற விமர்சனங்களும் எழும்.

இந்துக்களுக்கு எதிரான ஒரு கட்சிதான் திமுக என்ற பிரச்சாரத்தை பாஜக போன்ற கட்சிகள் தொடர்ந்து முன்னிலைபடுத்தி வருகின்றனர். இதற்கு ஸ்டாலின் பலமுறை விளக்கம் அளித்து விட்டார். "எனது மனைவி கோவிலுக்கு செல்வதை நான் ஒருபோதும் தடுத்ததில்லை. நான் இந்துக்களுக்கு எதிரானவன் என்பது போன்ற தோற்றத்தை உண்டுபடுத்தி தவறான பரப்புரையை மேற்கொள்கின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.
< இந்நிலையில், அத்திவரதர் உற்சவத்தில் துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டு வழிபட்டார். 40 வருஷத்துக்கு ஒருமுறை நடைபெறுவது இந்த அத்தி வர‌தர் உற்சவம். அதனால்தான் தமிழகம் மட்டுமல்லாது பல மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் இதில் கலந்து கொள்ள வருகிறார்கள்.

Durga Stalin prayed in Athi Varadar Kanchipuram

8ஆம் நாள், திருவிழாவில், துர்கா, தனது நெருங்கிய உறவினர்களுடன் விஐபிக்களுக்கான சிறப்பு வழியில் வந்தார். வசந்த மண்டபத்திற்கு சென்ற துர்கா ஸ்டாலின், அத்தி வர‌த‌ர் சுவாமிக்கு பச்சைப் பட்டாடை, பிரம்மாண்ட மலர் மாலை அணிவித்து தரிசனம் செய்தார். தரிசனம் செய்துவிட்டு பயபக்தியுடன் மலர்சரம் பெற்றுச் சென்றா

கருத்துகள் இல்லை: