வெள்ளி, 12 ஜூலை, 2019

குஜராத் காதல் திருமணம் செய்த தலித் இளைஞர் படுகொலை

தீக்கதிர்,.com : அகமதாபாத்: ரஜபுத் சமூகப் பெண்ணைக் காதல் திருமணம்
குஜராத் மாநிலம், அகமதாபாத் மாவட்டத்திலுள்ள வார்மோர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரேஷ் (25). தலித் இளைஞரான இவர், ரஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த ஊர்மிளா ஜாலாஎனும் பெண்ணை காதலித்து, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு,முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

செய்து கொண்ட தலித் இளைஞர், அரசு அதிகாரி மற்றும் காவல்துறை பெண் கான்ஸ்டபிள் முன்பாகவே வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆரம்பத்திலிருந்து இந்த திருமணத்தை ஏற்காத ஊர்மிளாவின் பெற்றோர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, ஊர்மிளா கர்ப்பிணியாக இருக்கிறார் என்பதை அறிந்து,அவரை தங்கள் வீட்டிற்கு அழைத்துள்ளனர். ஹரேஷூம் அனுப்பி வைத்துள்ளார்.இதனிடையே, ஹரேஷ் தனது மனைவியை அழைத்துவருவதற்காக, ‘அபயம்’ என்ற ஹெல்ப்லைன் மைய ஆலோசகர் பவிகா, பெண் கான்ஸ்டபிள் அர்பிதா லீலாபாய் ஆகியோருடன், ஊர்மிளாவின் பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். எனினும் அவர் நேரில் செல்லாமல், தூரத்தில் இருந்தவாறே, தனது மனைவியின் வீட்டைக் கைகாட்டி, தன்னுடன் வந்த அதிகாரிகளை அங்கு சென்று மனைவியை அழைத்து வருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

அர்பிதா மற்றும் பவிகா ஆகிய 2 அதிகாரிகளும், ஊர்மிளாவின் வீட்டிற்குச் சென்று, ஊர்மிளா, அவரது தந்தைதஷ்ரத்சின், சகோதரர் இந்தரஜித்சின் மற்றும் பிற குடும்பஉறுப்பினர்களோடு சுமார் 20 நிமிடங்கள் பேசியுள்ளனர். அப்போது, இன்னும் 1 மாதம் ஊர்மிளா தங்களுடன் இருக்கட்டும் என்று தந்தை தஷ்ரத்சின் கூறவே, அதைக் கேட்டுக் கொண்டு, அதிகாரிகள் மீண்டும் தங்களின் வாகனத்தை நோக்கி திரும்பியுள்ளனர்.
அப்போது, ஹரேஷ் வாகனத்தில் இருப்பதை பார்த்துவிட்ட ஊர்மிளாவின் தந்தை தஷ்ரத் சின், “இவன்தான் நம் பெண்னை கூட்டிச் சென்றவன். அவன் ஓட்டுநருக்கு அருகே அமர்ந்திருக்கிறான். அவனை காரில் இருந்து வெளியே இழுத்து கொல்லுங்கள்” என்று கூப்பாடு போட்டுள்ளார்.உடனே, டிராக்டர்கள் மற்றும் பைக்குகளுடன் வாகனத்தை சுற்றி வளைத்த 8 பேர், ஹரேஷையும், தடுக்க வந்த அதிகாரிகளையும் கத்தி மற்றும் அரிவாள்களால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், ஹரேஷ் சம்பவ இடத்திலேயே இறந்து போயிருக்கிறார். பெண் கான்ஸ்டபிள் அர்பிதா படுகாயம் அடைந்துள்ளார்.உயர்வகுப்பைச் சேர்ந்த பெண்ணை, காதல் திருமணம் செய்து கொண்டதற்காக தலித் இளைஞர் கொடூரமான முறையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்டிருப்பது, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: