மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு தமிழக மக்கள் வாக்களித்தது (திமுக கூட்டணிக் கட்சிகள் அனைத்துக்கும்தான்) எதனால்?
மோடியின் கொள்கைகளை நிராகரிக்கவேண்டும் என்று முடிவெடுத்த தமிழர்களுக்கு இந்தக் கூட்டணி ஓர் அரசியல். ஆயுதமாக, ஊடகமாக, ஒரு political agency ஆக அமைந்தக் காரணத்தால் தான்... இது தமிழ்ச்சமூகத்தின் tactical voting.
மோடி அரசின் 10 சதவீத இட ஒதுக்கீட்டையும் எதிர்த்தே தமிழக மக்கள் வாக்களித்தார்கள்.
இன்று காங்கிரசும் மார்க்சிஸ்ட்களும் செய்திருப்பது பச்சைத் துரோகம். ஆனால் கொஞ்சமும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையைத் தமிழ்நாடே தீர்மானிக்கவேண்டும் என்பது மட்டுமே நமது முன்மொழிவாக இருக்கவேண்டும். அது தமிழ்நாட்டின் சமூக நீதி அரசியலின் அடிப்படையிலேயே இருக்கவேண்டும்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது "தமிழ்நாட்டை தமிழ்நாட்டிலிருந்தே ஆளவேண்டும், நாக்பூரிலிருந்து அல்ல" என்றார் ராகுல். நாக்பூரின் இட ஒதுக்கீட்டு அழிப்புத் திட்டத்துக்கு தமிழ்நாட்டுக் காங்கிரஸ் துணைபோவது காமராருக்கும் செய்யும் துரோகம்.
சிபிஎம்மைப் பொறுத்தவரை - என்ன சொல்ல?
உலக கம்யூனிச இயக்கத்திலிருந்தே ஒரு அறிவுரையைச் சொல்லவேண்டும் என்றால், இப்படித்தான் சொல்வேன் - தலைமையத்தை தகர்த்தெறியுங்கள். Bombard the headquarters.
- ஆழி செந்தில்நாதன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக