சனி, 13 ஜூலை, 2019

மகளை கொலை செய்ய பாஜக எம்.எல்.ஏ திட்டம் மகள் வெளியிட்ட .. வீடியோ


மாலைமலர் : தலித்  இளைஞரை திருமணம் செய்து கொண்டதால், தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக பாஜக எம்.எல்.ஏ ஒருவரின் மகள் வெளியிட்டிருக்கும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திர பிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ராஜேஸ் மிஸ்ரா. இவரது மகள் சாஷி மிஸ்ரா. 23 வயதான இவர் தனது தந்தை மற்றும் சகோதரர்களால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், எனவே காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என சாஷி மிஸ்ரா வெளியிட்டிருக்கும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் தனது வீடியோவில் ”மரியாதைக்குரிய எம்.எல்.ஏஜி, பப்பு பர்தால் ஜி மற்றும் விக்கி பர்தால் ஜி என்னை நிம்மதியாக வாழ விடுங்கள். நான் திருமணம் செய்து கொண்டேன். ஃபேஷனுக்கான குங்குமம் வைக்கவில்லை” என அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் இதனிடையே கடந்த வியாழக்கிழமை சாக்‌ஷி மித்ரா, அஜிதேஷ் குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் அந்த வீடியோவில் ”தனது தந்தை தங்களை தாக்க குண்டர்களை அனுப்பியதாக தெரிவித்துள்ளார்.
எங்களால் ஓடி ஒழிய முடியவில்லை எனவும் நாங்கள் மிகவும் சோர்வாக இருப்பதாகவும், எனவே எங்களை தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் எங்களது உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், அதற்கு எனது தந்தையும் சகோதரர்களும் தான் காரணம் என சாஷி மிஸ்ரா தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது

கருத்துகள் இல்லை: