செவ்வாய், 9 ஜூலை, 2019

10% பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கிடைக்கப் போவது ஏமாற்றம்தான் ..

Muralidharan Pb : மேற்குத் தாம்பரத்திற்கு 80களில் மூன்று குடும்பங்கள் வந்து
இறங்குகிறது. குடும்பம் 1 மாயவரம் கணேசன், 2 மதுரை கோபாலன் மற்றும் 3 ஸ்ரீரங்கம் மாதவன். மூவருமே ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
ரயில்வேயில் வேலை செய்யும் கணேசன் தனது மகன் வைத்தீஸ்வரனை எப்படியாவது ரயில்வேயில் பணிக்கு அமர்த்திட படிக்க வைக்கிறார். 15 ஆண்டுகளுக்கு பிறகு தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேருகிறார் ராமன். கை நிறைய சம்பளம்.
இன்சூரன்ஸ் ஏஜெண்டான கோபாலன் தனது மகன் ராமனை தன்னைப் போலவே ஏஜெண்டுகளாக்கிட முயன்று அதில் வெற்றி பெறுகிறார்.
கோவில் அர்ச்சகராக பணியாற்றி வரும் மாதவன் தனது மகன் ராகவனையும் வேதங்கள் பயிலவைத்து அர்ச்சகராக்குகிறார்.
ஆனால் இவர்களது அடுத்த தலைமுறைக்கு தங்களது தந்தையார் போல அதே பணியை செய்ய விரும்பவில்லை.
வங்கியில் வேலைக்கு முயலும் வைத்தீஸ்வரனின் மகள் அலமேலு. அவள் தந்தைக்கு மாதம் 64000 சம்பளம். மகளை படிக்கவைக்க பயிற்சி நிறுவனத்தில் தனது சேமிப்பை எடுத்து செலவிடுகிறார்.
இரவும் பகலும் உழைத்து மாதம் சுமார் 40000 சம்பாதிக்கும் ராமன் தனது மகன் கௌஷிக்கை பயிற்சி வகுப்பில் சேர்த்து நீட் எழுத வைக்கிறார்.

கோவில் வருமானம் மட்டுமே வெறும் 20000 வரை ஈட்டும் ராகவன் 1180 மார்க் வாங்கிய மகன் ஹரீஷை வசதி இல்லாத காரணத்தால் அவன் விருப்பபட்ட ஐஐடியில் படிக்க பயிற்சி வகுப்புக்கு அனுப்ப இயலவில்லை.
முறையே மாதம் 64000, 40000 மற்றும் 20000 சம்பாதிக்கும் ஒரே வகுப்பினருக்கு கல்வியோ, வேலையோ அவர்கள் நினைத்தபடி அமைத்துக் கொடுக்க முடியவில்லை. இது இப்படித்தான் தொடரும். இவை ஒரு உதாரணம் தான்.
அங்கு அதை நிர்ணயம் செய்வது அனைவரும் நினைப்பது போல 'தகுதி'யால் இல்லை அது 'வசதி'யால் அமைகிறது. ஒரே மாதிரியான சமூகத்தைச் சேர்ந்த இவர்களுக்குள்ளேயே இவ்வளவு பேதங்களை காண முடியுமென்றால், படிக்கின்ற வாய்ப்பை அமையாத மற்றவர்களுக்கு எப்படி கிடைக்கும்?
வாக்கை பெருக்கிட ஒரு கும்பல் ஒரு சிலரை மட்டும் குறிவைத்தும், காசு பெருமளவில் கொழிக்கும் என ஆய்ந்து, பெருமுதலாளிகளின் பயிற்சி நிறுவனங்கள்
என சிலர் மட்டுமே பயனடையைப் போகும் இந்த கல்வித்திட்டமும் ஒரு நாள் இல்லை ஒருநாள் வெளிச்சத்திற்கு வரும். உண்மையாகவே தேவைக்கான பயனாளிகள் அப்போதும் ஏமார்ந்து, பின் தங்கி இருப்பார்கள். இன்று யாரெல்லாம் இந்த 10% பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு பயன் உண்டு என குதூகலிக்கிறார்களோ அச்சமுகமே வாய்ப்புகள் இல்லாது இருட்டில் தவிக்கும் போது உணரும்.
எனவே வெகு மக்களுக்கானது அல்ல. வெகுசிலருக்கானது

கருத்துகள் இல்லை: