புதன், 10 ஜூலை, 2019

நிர்மலாதேவி தர்காவுக்குள் தலைவிரி கோலத்தில் புலம்பல்.. தூக்கி சென்ற போலீஸ்-வீடியோ


tamiloneindia :அருப்புக்கோட்டை: எனக்கு பேய் பிடிச்சிருக்கு.. மந்திரிச்சு விடுங்க" என்று தர்காவுக்குள் தலைவிரி கோலமாக உறுமிய நிர்மலாதேவியால் அருப்புக்கோட்டையே ஆடிவிட்டது.
இதுநாள் வரை தெளிவாக இருந்த நிர்மலாதேவிக்கு என்ன ஆச்சுன்னு தெரியல. நேற்று ஸ்ரீவில்லிப்புத்தூர் கோர்ட்டுக்கு வந்து தமிழகம் முழுவதும் பேச வைத்து விட்டார்.
"காமாட்சி அம்மன் பேசறேன்.. எனக்கு எதிரான சாட்சி சொன்ன குழந்தைங்க எல்லாம் தூக்கு போட்டு செத்து போய்ட்டாங்க.." என்று அருள்வாக்கு வந்தவர் போல உளறி கொட்டினார்.
இதையடுத்து அங்கு வந்த ஒரு வக்கீல், "இந்தாம்மா செல்போன்.. உன் புருஷன்கிட்ட பேசு" என்று போனை தரவும், அதை வாங்கி தரையில் மடார் மடார் என போட்டு உடைத்துவிட்டார் நிர்மலா. செல்போனை ரிப்பேர் செய்ய மொபைல் கடைக்கு உடன் இருந்தவர்கள் அழைத்து சென்றால், அங்கேயும் தரையில் உட்கார்ந்து கொண்டு தியானம் செய்து உளற ஆரம்பித்துவிட்டார்.
பிறகு திடீரென அந்த தெருவில் குறுக்கு நெடுக்குமாக ஆவேசமாக நடந்தார். தலையில் இருந்த மல்லிகை பூவை பிய்த்து போட்டபடி நடந்து கொண்டிருந்ததை மக்கள் பார்த்தவாறே சென்றனர்.
இதற்கு பிறகு இரவு 7 மணி இருக்கும்... அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தர்காவுக்குள் நுழைந்துவிட்டார். குழந்தைகளுக்கு மந்திரிக்கும் பகுதிக்கு சென்ற அவர் தரையில் அமர்ந்து கொண்டார். "நபிகள் நாயகம் என்னை இங்குதான் உட்கார சொன்னார். எனக்கு பேய் பிடிச்சிருக்கு.. மந்திரிச்சு விடுங்க" என்று உறுமினார். தலைமுடியெல்லாம் அவிழ்த்துவிட்டு கொண்டார்.

தலையை சுழட்டி சுழட்டி பேய் பிடிச்சிருக்கு என்று முட்டி முட்டி சொல்லி கொண்டே இருந்தார். இதனைக்கண்டதும் ஜமாத் நிர்வாகிகள் அங்கு திரண்டனர்.விஷயம் போலீசாருக்கு எட்டியதும், விரைந்து வந்த அவர்கள் தர்காவை விட்டு வெளியேறுமாறு சொன்னார்கள். ஆனால் நிர்மலாவோ, தனக்குதானே பேசிக் கொண்டே இருந்தார்.

/ இதையடுத்து, இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையில் அங்கு வந்த மகளிர் போலீசார் நிர்மலாதேவியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போதும் வெளியே போக மறுத்து முரண்டுபிடித்தார். கிட்டத்தட்ட 2 மணி நேரம் தர்காவில் எல்லாரையும் படாதபாடு படுத்தி விட்டார். கடைசியில் போலீசார் அவரை குண்டுக்கட்டாக வெளியேற்றினர். வீடு ஆத்திப்பட்டி காவியநகரில் உள்ளதால், வாகனத்தில் ஏற்றி அழைத்துச்சென்றனர்.

ஆனால் வீட்டுக்குள் செல்ல மறுத்து அங்கேயும் நிர்மலாதேவி அடம் பிடித்தார். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வழியாக அவரை வீட்டுக்குள்ளே அனுப்பி வைத்தனர்.

கருத்துகள் இல்லை: