Karthick Ramasamy :
தமிழகத்தில்
CBSE பள்ளிகளை திறக்க தமிழக அரசிடம் No
objection certificate வாங்க வேண்டும். மத்திய பாதுகாப்பு படைகள், மத்திய அரசு நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களின் குழந்தைகள் பெற்றோர் வேலை மாறுதல் ஆகி வேறு மாநிலத்திற்கு செல்லும்போது அவர்கள் படிப்பு ஒரே பாடத்திட்டத்தில் இருந்தால் நல்லது என்கிற ஒரே காரணத்திற்காக மட்டுமே இந்த பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டது.
மற்றபடி அந்த பாடத்திட்டம் சிறந்தது என்கிற போலியான பிம்பத்தை பல காலமாக இங்கு விதைத்து விட்டார்கள். அதை பெரும்பாலான பெற்றோர்களும் நம்பிவிட்டார்கள்.

அந்த பிம்பத்தை வைத்து இங்கு வியாபாரம் மட்டும் நடக்கவில்லை, அதன் முதன்மை
நோக்கமே அரசியல்தான். வித்யாலயா, வித்யாஸ்ரம் என்று இன்னும் பல பெயர்களில்
இந்துத்துவ அமைப்புகளின் நிதி உதவியுடன் தமிழகம் முழுவதும் பல CBSE
பள்ளிகள் கடந்த சில வருடங்களாக துவங்கப்பட்டன. அவற்றிற்கு எந்த
தடையுமில்லாமல் தமிழக அரசு NOC வழங்கியது.
எங்களின் பாடத்திட்டம் சரியில்லை, கல்வித்தரம் சரியில்லை, அதனால் CBSE பள்ளிகளை நடத்த NOC கொடுக்கிறோம் என்பதுதான் அதன் பொருளே.
இவர்கள் CBSE பள்ளிகளின் மூலம் தமிழகத்தில் இந்தியை நுழைக்க ( கட்டாயம் இல்லை என்றாலும்) முயற்சிக்கிறார்கள் என்பது மட்டுமில்லை இந்துத்துவ சிந்தனைகளுக்கு மாணவர்களை தயார்படுத்துவதற்காக இது போன்ற பள்ளிகளை தளமாக பயன்படுத்த வேண்டும் என்பது தான் நோக்கம்.
சரி விசயத்திற்கு வருவோம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் MP ரவிக்குமார் அவர்கள் விழுப்புரம் கலக்டரை சந்தித்து தொகுதி மக்களின் கல்வி வளர்ச்சிக்காக கோரிக்கை வைக்கிறார். நான்கூட அரசு பள்ளிகளில் கூடுதல் வசதிகள் வேண்டும் காலி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப் பட வேண்டும் என்று கோரிக்கை வைப்பார் என்று பார்த்தால் விழுப்புரம் மாவட்டத்தில் கேந்திர வித்யாலயா ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்.
உங்களைப் போன்றவர்கள் கூட நமக்கு எது தேவை என்று புரிந்து செயல்படாவிட்டால் வேறு யாரிடம் இதை எதிர்பார்ப்பது. முன்பு நீட் தேர்வை ஆதரித்தீர்கள், இப்பொழுது கேந்திர வித்யாலயா கொண்டு வர கோரிக்கை வைக்கிறீர்கள்.
திமுகவினர் யாராவது CBSE பள்ளிகளை ஆரம்பிப்பது நடத்துவது சரியா என்று கேட்கலாம், கண்டிப்பாக தவறுதான். இதில் அது அவர்கள் தனிப்பட்ட விவகாரம் என்று எதுவுமில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக