மாலைமலர் :இசை நிகழ்ச்சியில் ரசிகர்கள்
இருக்கை மாறி அமர்ந்ததால் சில நேரம் அங்கு சலசலப்பு ஏற்பட்டதற்கு இளையராஜா
வேதனை தெரிவித்துள்ளார்.
இளையராஜா இசை
நிகழ்ச்சிக்கு ரூ.500 முதல் ரூ.10 ஆயிரம் வரை டிக்கெட் கட்டணம்
நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இளையராஜா இசை நிகழ்ச்சியில், நீண்ட காலம்
கழித்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஜேசுதாஸ் பாடியதால் ரசிகர்களும் ஆர்வமாக
டிக்கெட் எடுத்து வந்தனர்.
குறைந்த கட்டண
டிக்கெட் எடுத்தவர்கள் அதிக கட்டண டிக்கெட்டுகளுக்கான இடங்களில் சென்று
அமர்ந்ததால் பிரச்சினை ஏற்பட்டது.
இதனால் அதிக கட்டணம் செலுத்தி டிக்கெட் எடுத்தவர்கள் நொந்து போனார்கள். அவர்களுக்கு இருக்கைகள் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன சிலர் இதை வீடியோவாக்கி சமூக வலை தளங்களில் பதிவிட்டனர். இதனால் நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது. நிகழ்ச்சியில் ஒவ்வொரு பாடலுக்கும் இடையில் சில நிமிடங்கள் இளையராஜா பேசினார். அந்த பாடல்கள் உருவான விதம், நடந்த மறக்க முடியாத சம்பவங்கள் பற்றி குறிப்பிட்டார். அப்போது இந்த சம்பவம் குறித்தும் தனது வேதனையை பகிர்ந்து கொண்டார்.
இதுபற்றி அவர் பேசியதாவது:-< ‘என் இசையால் தான் நீங்கள் வாழ்கிறீர்கள். உங்களுக்காக தான் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேல் நின்று நான் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறேன். ஆனால் உங்களில் சிலர் செய்யும் செயல்கள் எனக்கு வேதனை அளிக்கிறது.

நீங்கள்
இப்படி டிக்கெட் மாறி அமர்ந்தால் அதிக கட்டணம் செலுத்தியவர்கள் என்ன
செய்வார்கள்? ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்? உங்களுக்கான இடங்களில்
அமர்ந்து இசையை கேட்டு மகிழுங்கள்’.
இவ்வாறு அவர் கூறினார்.<
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக