தினகரன் : சென்னை: அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பாவின் போர்க்கொடி பற்றி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். ராஜன் செல்லப்பாவின் பேட்டியை முழுமையாக பார்த்த பின்பு கருத்து கூறுவதாக கூறியுள்ளார்.
மதுரை: அதிமுகவுக்கு ஒரே தலைமை தேவை என்று மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பரபரப்பு பேட்டியளித்துள்ளார். மேலும் பேசிய அவர் அதிமுக பொதுக்குழுவை உடனே கூட்ட ராஜன் செல்லப்பா வலியுறுத்தினார். கட்சியில் அதிகாரம் படைத்த ஒருவர் அதிமுகவுக்கு தலைமையேற்க வேண்டும் என்றும், ஜெயலலிதாவின் ஆளுமைத்திறன் தற்போது அதிமுகவில் யாருக்கும் இல்லை என்று ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார். அதிமுக கட்டுப்பாடுடன் செயல்பட்டிருந்தால் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் என்று தெரிவித்தார்.
ஜெயலலிதாவை விட அதிக திட்டங்களை எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி வருவதாக ராஜன் செல்லப்பா தெரிவித்தார். அதிமுகவில் யாருக்கு அதிகாரம் உள்ளது என்பதை அறிய முடியவில்லை என்றும், டிடிவி தினகரன் என்ற மாயை இப்போது இல்லை என்று ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார். தேனி எம்.பி. ரவீந்திரநாத் குமாருடன் 9 எம்எல்ஏக்கள் ஜெயலலிதா சமாதிக்கு செல்லாதது ஏன்? 9 எம்எல்ஏக்களை தடுத்து நிறுத்தியது யார்? அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் மட்டுமே மக்கள் மனதில் உள்ளதாக தெரிவித்த அவர், அதிமுகவுக்கு பொதுச்செயலாளர் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ராஜன் செல்லப்பா வலியுறுத்தியுள்ளார். எடப்பாடியை பொதுச்செயலாளராக ஆக்குவது பற்றி பொதுக்குழு தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், அதிமுகவில் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அணிகள் முழுமையாக இணையவில்லை என்று தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக