புதன், 5 ஜூன், 2019

இந்தி படிக்கும் மாநிலங்கள் ஏன் முன்னேறவில்லை .. NITI Aayog, 21.12.2018 நித்தி ஆயோக்: வறுமை பட்டியல்

Arul Rathinam : "காலம் காலமாக இந்தி படிப்பவன் இன்னமும் ஏன் முன்னேறவில்லை?"
இந்தி படித்தால் தமிழன் முன்னேறிவிடுவான் என்கிற விவாதம் ஒருபக்கம் இருக்கட்டும். காலம் காலமாக இந்தி படிப்பவன் இன்னமும் ஏன் முன்னேறவில்லை?
படத்தில் இருப்பது, 21.12.2018 அன்று மத்திய அரசின் நித்தி ஆயோக் வெளியிட்ட, இந்திய மாநிலங்களில் வறுமை ஒழிப்பு நிலையின் பட்டியல். இந்த பட்டியலின் படி, இந்தியை தாய்மொழியாக கொள்ளாத மாநிலங்கள் தான் அதிகம் முன்னேறியுள்ளன. காலம் காலமாக இந்தி படிக்கும் மாநிலங்கள் பின் தங்கியுள்ளன.
வறுமை ஒழிப்பு மட்டுமல்ல. நீடித்த வளர்ச்சிக்கான 16 விதமான குறியீடுகளிலும் இந்தியை தாய்மொழியாக கொண்ட மாநிலங்கள் பின் தங்கியுள்ளன. இந்தி படிக்காத மாநிலங்கள் முன்னேறி உள்ளன. அதிலும் குறிப்பாக தமிழ்நாடும் கேரளவும் தான் அதிகம் முன்னேறிய பகுதி என்கிறது மத்திய அரசின் நித்தி ஆயோக்.
இப்போது சொல்லுங்கள்... காலம் காலமாக இந்தி படிப்பவன் இன்னமும் ஏன் முன்னேறவில்லை?

(இந்தி படிக்காதது தான் தமிழனின் இழி நிலைக்கு காரணம் என்கிற மிகப்பெரிதாக கட்டமைக்கப்படும் விவாதங்களை பார்க்கும் போது மலைப்பாகவும் அயர்ச்சியாகவும் இருக்கிறது!)
----------------
ஆதாரம்: SDG India Index: Baseline Report 2018, NITI Aayog, 21.12.2018
நித்தி ஆயோக்: வறுமை பட்டியல் 2018

கருத்துகள் இல்லை: