Mathivanan Maran
/tamil.oneindia.com
டெல்லி: பிரியங்கா கண்வர் வதேராவின் லண்டன் சொத்துகளை முடக்க அமலாக்கத்துறை
நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ராபர்ட் வதேரா மீது ஏராளமான நில அபகரிப்பு புகார்கள் நிலுவையில் உள்ளன.
மேலும் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சொத்துகளை வாங்கி குவித்திருக்கிறார்
வதேரா என்பது குற்றச்சாட்டு.
இது தொடர்பாக அமலாக்கப் பிரிவு தொடர்ந்து வதேராவிடம் விசாரணை நடத்தி
வருகின்றனர். தற்போது வதேரா பெற்றிருக்கும் முன்ஜாமீனை ரத்து செய்ய
வேண்டும் என்றும் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல்
செய்துள்ளது.
இதனிடையே வெளிநாடுகளுக்கு வதேரா செல்ல நீதிமன்றம் அனுமதித்திருக்கிறது.
இதற்கும் அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் லண்டன் உள்ளிட்ட நகரங்களில் வதேரா வாங்கிக் குவித்த சொத்து
விவரங்களை அமலாக்கத்துறை பெற்றிருக்கிறது. மேலும் வெளிநாடுகளில் சட்டவிரோத
பண பரிமாற்றத்தில் வதேரா ஈடுபட்டதையும் உறுதி செய்திருக்கிறது
அமலாக்கத்துறை.
இதனடிப்படையில் முதல் கட்டமாக லண்டனில் உள்ள வதேராவின் சொத்துகளை
முடக்குவதில் அமலாக்கத்துறை மும்முரமாக இறங்கியுள்ளது. இது தொடர்பாக
இங்கிலாந்து அரசுக்கும் கடித்அம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்கின்றன
டெல்லி தகவல்கள்<
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக