வெள்ளி, 7 ஜூன், 2019

தோழர்களுக்கு தமிழகத்தில் இந்தி மொழி பயிற்சி . CTU வின் இந்தி பிரசாரம்

Bilal Aliyar : அன்புள்ள தோழர்களுக்கு!
தமிழகத்தில் இந்தி மொழி பயிற்சி அளிக்க பட்டறை நடத்தப்படுவதாக இந்த சிறு விளம்பரம் தெரிவிக்கிறது. ஏன் என கேட்டால் தேசியம் என எதையாவது தூக்கி கொண்டு வருவீர்கள். அதனால் ஏன்? என்று நான் கேள்வி எழுப்பவில்லை. ஆனால் ஒரே ஒரு சந்தேகம் இருக்கிறது.. அதை மட்டும் தீர்த்து வைத்தால் மகிழ்ச்சி அடைவேன்.
தமிழக தொழிலாளர்களுக்கு இந்தி மொழி பயிற்சி அளிக்கப்படுவதை போல, எங்காவது? என்றைக்காவது வட மாநில தொழிலாளர்களுக்கு தமிழ் மொழி பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறதா? ஏனெனில் தமிழகத்தில் தற்போது அமைப்பு சாரா உடலுழைப்பு தொழிலாளர்கள் என்ற கணக்கில் வடமாநில தொழிலாளர்கள் தான் அதிகமாக இருப்பதாக பேசப்படும் சூழலில், அவர்களுக்கு தமிழ் கற்று கொடுத்தால் அவர்களுக்கும் பலனளிக்கும், நாமும் சரவண பவனில் க்யாஹை என்ற சொற்களை கடந்து செல்லலாம்? செய்வீர்களா தோழர்களே...
பின்குறிப்பு: இப்போதைய சூழலில் சீன மொழி கற்று கொடுத்தாலாவது ஓரளவிற்கு பிழைத்து கொள்ள முடியும். இந்த செத்து போன இந்தியை கற்று கொடுத்து என்ன பிரயோசனம்? ஒரு வேளை பொலிட் பீரோவில் பேச வசதியாக இருக்கும் போல...

கருத்துகள் இல்லை: