சனி, 8 ஜூன், 2019

ஸ்டாலின் இலங்கை வருமாறு இலங்கை TNA தலைவர் மாவை சேனாதிராஜா அழைப்பு

தினகரன் : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவிற்கும் தி.மு.கவின் தலைவர் மு.க.ஸ்டா லினுக்கும் இடையிலான சந்திப் பொன்று நேற்றைய தினம் இடம் பெற்றுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம், ஈழத் தமிழர்களுக்கு இதுவரை வழங்கிய ஒத்துழைப்புக் களையும் உதவிகளையும் தொடர்ந்து வழங்க வேண்டும் எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உரிய ஆதரவினை வழங்கும் எனவும் மாவை சேனாதிராசா இதன்போது தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் பல முக்கியஸ்தர்களையும் மாவை சேனாதிராசா சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.  இந்த சந்திப்புக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவை சேனாதிராஜா, இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண, 13 -வது அரசியல் சட்ட திருத்தம் போதுமானது அல்ல என்றார். எனவே, வருகிற 9 - ம் தேதி, இலங்கை வரும் இந்திய பிரதமர் மோடியிடம் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு,  வலியுறுத்துவோம் என்று மாவை சேனாதி ராஜா தெரிவித்தார்
 

கருத்துகள் இல்லை: