அருள். சென்னப்பராஜன் :
இந்தி திணிப்பு அல்ல, சமஸ்கிருத திணிப்பு! மும்மொழி கொள்கையல்ல, நான்கு மொழிகள் கொள்கை!
கொஞ்சம் நேரம் எடுத்து, இந்த "தேசிய கல்வி கொள்கை வரைவு 2019" அறிக்கையில் அப்படி என்னதான் இருக்குன்னு படித்தேன், இன்னும் முழுசா படிக்கவில்லை. இதுவரை படித்ததில் இருந்து சில உண்மைகள் (Point 1-9 are facts, rest are my inference)
1. இந்த குழுவில் இந்தியாவின் தமிழகம், கேரளா, ஆந்திரா, பெங்காளி மற்றும் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த ஒருவர் கூட கிடையாது. தென் மாநிலங்களில் கர்நாடகாவில் இருந்து இருவர் (அதில் ஒருவர் கஸ்தூரிரங்கன்). ஆக, inappropriate representation.
1. இந்த குழுவில் இந்தியாவின் தமிழகம், கேரளா, ஆந்திரா, பெங்காளி மற்றும் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த ஒருவர் கூட கிடையாது. தென் மாநிலங்களில் கர்நாடகாவில் இருந்து இருவர் (அதில் ஒருவர் கஸ்தூரிரங்கன்). ஆக, inappropriate representation.
2. 2030குள் 3-18 வயதுள்ள அனைவருக்கும் தரமான, கட்டாய, இலவச கல்வியளித்தல். (Chapter 3)
3. 2-8 வயது வரையுள்ள குழந்தைகள் எளிதில் பன் மொழிகளை கற்க்கலாம். அதனால் அவர்களுக்கு மூன்று மொழிகளை ஆரம்ப கல்வியில் பயிற்றுவிக்க வேண்டும்(4.5). முடிந்தால் 8ஆம் வகுப்பு வரை உள்ளூர் மற்றும் தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம் தரப்படவேண்டும்(P4.5.1).
4. முதலாம் வகுப்பிலிருந்தே குழந்தைகளுக்கு மூன்று அல்லது அதற்க்கும் மேற்பட்ட மொழியை அறிமுகப்படுத்துதல்(P4.5.3).
5. இந்தியாவில் உள்ள மொழிகள் வளமானவை, அறிவியல் பூர்வமானவை. இவ்வளவு இருந்தும் துரதிர்ஷ்டவசமாக ஆங்கில வழி கல்வி வளர்த்து வருகிறது, அது தேவையற்றது. பல முன்னேறிய நாடுகள் உள்ளூர் மொழி கொண்டே வளர்ச்சி பெற்றுள்ளன.(P4.5.4)
6. மும்மொழி கொள்கை அமல்படுத்துதல்(P4.5.6 Implementation of three-language formula)
7. சமஸ்கிருதம் ஒரு அறிவுக்களஞ்சியமாக திகழ்கிறது. அதன் சிறப்பு மற்றும் இந்திய வளர்ச்சி/ஒருமைப்பாடு ஆகியவற்றில் அம்மொழியின் பங்கினை கருத்தில் கொண்டு அதை அனைத்து மட்டத்திலும் ஒரு தேர்வுபாடமாக வைத்தல் (P4.5.14 Study of Sanskrit). அதனுடன்(In addition), தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மற்ற செம்மொழிகளையும் பயிற்றுவித்தல். அதுல கடைசியாக இந்தியையும் சேர்த்துட்டாங்க P4.5.15.
8. 6-8 ஆம் வகுப்பு வரை இரண்டு வருட செம்மொழி படிப்பு.
9. இந்த அறிக்கையில், கீழ்கண்ட மொழிகள் எத்தனை முறை பயன்படுத்தப்பட்டுள்ளது (References)
English - 24 (mostly negative statements)
Sanskrit- 23
Hindi - 12
Tamil - 5
Kannada/Telugu/Malayalam - 1-2
மேற்கண்டவற்றிலிருந்து:
1. பாட சுமை: முதலாம் வகுப்பிலேயே 3 மொழிகளை திணித்து பாட சுமை ஏற்றி எளியவர்களை படிக்க வராமல் செய்தல்.
2. ஆங்கிலம் தேவையற்றது, வீணாய் போன மொழி - எந்த கருவியை கொண்டு நாம் முன்னேறுகிறோமோ அதை பிடுங்கிக்கொங்க.
3. எல்லாரும் பொதுவாக நினைப்பது போல் இது இந்தி திணிப்பு கிடையாது. உண்மையில் இது சமஸ்கிருத திணிப்பு. சமஸ்கிருதமே அறிவியல் மொழி அதை அனைவரும் படிக்க வேண்டும், அதனுடன் மற்றதுகளையும் கூடுதலாக சேற்கலாம் என்று போனாபோகுதுன்னு பறிந்துறைக்கறாங்க.
4. இது மும்மொழி கொள்கையே அல்ல, நான்கு மொழி கொள்கை (including classical language study).
இப்பதான் எல்லாரும் ஓரளவிற்கு படிப்பின் முக்கியத்துவத்தை அறிந்து பள்ளிக்கு வராங்க, ஆங்கிலம் படிக்கறாங்க. அவன மூனு-நாளு மொழியைப் படின்னு முளையிலேயே கிள்ளாதீங்க. இது மொழிக்கு மட்டுமல்ல சமூக நீதிக்கும் சேர்த்து வைக்கப்பட்ட ஆப்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக