புதன், 14 நவம்பர், 2018

மோடிக்கு எதிரான குஜராத் படுகொலை மனு ஏற்றுகொள்ள பட்டது ..கொல்லப்பட்ட காங்கிரஸ் எம்.பி இஷான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி


Babu Vmk : குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில் மோடிக்கு எதிரான
மனுவை ஏற்றுக்கொண்டிருக்கும் உச்சநீதிமன்றம், வருகிற திங்கட்கிழமை விசாரிக்க போவதாக அறிவித்திருக்கிறது.
குஜராத்தில் 2002ம் ஆண்டு நடந்த மதக் கலவரத்தில், அகமதாபாத் குல்பர்க் சொசைட்டி பகுதியில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. இஷான் ஜாப்ரி மற்றும் 68 முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய சிறப்பு விசாரணைக் குழு, மோடிக்கும் குற்றம்சாட்டப்பட்ட 59 பேருக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறியது. இதையடுத்து, வழக்கிலிருந்து மோடி விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், மோடி குற்றமற்றவர் எனக்கூறி குஜராத் கலவர வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, கலவரத்தில் கொல்லப்பட்ட காங்கிரஸ் எம்.பி இஷான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்டிருக்கும் உச்சநீதிமன்றம், வருகிற திங்கட்கிழமை விசாரணை நடைபெறும் என அறிவித்திருக்கிறது.

கருத்துகள் இல்லை: