வெள்ளி, 16 நவம்பர், 2018

சிகிச்சை பெற்றுவரும் ‘நெல்’ ஜெயராமனுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு 


tamil.thehindu.com/ பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து உற்பத்தி செய்து வரும் நெல் ஜெயராமனின் மருத் துவ செலவுக்காக தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
திருவாரூர் மாவட்டம் கட்டி மேட்டைச் சேர்ந்த ஜெயராமன், ‘நமது நெல்லை காப்போம்’ என்ற இயக்கம் மூலம் பாரம்பரிய விவசாயத்தை போற்றிப் பாது காத்து வருகிறார். இயற்கை முறை யில் பாரம்பரிய நெல் ரகங்களை உற்பத்தி செய்து, அனைத்து விவசாயிகளும் பயன் பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் சேவை செய்து வருகிறார்.
மாப்பிள்ளை சம்பா, ராஜமன்னார், கவுனி, மிளகுசம்பா, குண்டு கார், சேலம் சம்பா, சிகப்பு குருவிகார், கல்லிமடையான், சம்பா மோசானம், வாடன் சம்பா, பிச்சாவாரி, நவரா, நீலன் சம்பா போன்ற 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து, விவசாயிகளிடையே பிரபலப்படுத்தி உள்ளார்.
தனது அனுபவங்களை மற்ற விவசாயிகளுடன் பரிமாறிக் கொள்ளும் வகையில் ஆண்டு தோறும் மே மாதத்தில் ‘பாரம்பரிய நெல் திருவிழா’ நடத்தி வருகிறார். அதில், ஒவ்வொரு விவசாயிக்கும் 2 கிலோ பாரம்பரிய விதைகளை இலவசமாக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இதுவரை ஜெயராமன் 37 ஆயிரம் விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்தி, தமிழ கத்தில் பாரம்பரிய நெல் உற்பத்தி யினை உயர்த்திய பெருமைக் குரியவர். மேலும், இவர் ‘மாமருந்தாகும் பாரம்பரிய நெல்’, ‘நெல்லதிகாரம்’, ‘நெல்லுக் கிறைத்த நீர்’ போன்ற நெல் தொடர்பான நூல்களை எழுதி, விவசாயிகளிடையே பாரம்பரிய நெல் ரகங்களை பிரபலப்படுத்தியும் அதன் உற்பத்தியை ஊக்கப்படுத் தியும் உள்ளார்.
தமிழக விவசாயிகளுக்காக இத்தகைய சேவையை செய்து வரும் ஜெயராமன் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தியை அறிந்து வருத்தமடைந்தேன். அவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்பது எனது விருப்பமாகும். பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாப்பதில் ‘நெல்’ ஜெயராமன் ஆற்றிய சிறப் பான சேவையை பாராட்டும் விதமாக அவருக்கு ரூ.5 லட்சம் நிதியை உடனடியாக வழங்க வேளாண் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
நெல் ஆராய்ச்சியாளர் ஜெயராமனுக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித் துள்ளதற்கு மனிதநேய ஜன நாயக கட்சியின் பொதுச்செய லாளர் எம்.தமிமுன் அன்சாரி எம்எல்ஏ நன்றி தெரிவித்துள் ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘நேற்று முன்தினம் முதல்வரை நானும், உணவுத்துறை அமைச்சர் காமராஜும் சந்தித்து ‘நெல்’ ஜெயராமனுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். அதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவ செலவுக்காக ரூ.5 லட்சம் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இது நெல் ஜெயராமனின் குடும்பத் துக்கு மட்டுமல்ல, அனைத்து விவசாயிகளுக்கும் செய்த மரியாதையாக கருதுகிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.மாப்பிள்ளை சம்பா, ராஜ மன்னார், கவுனி, மிளகு சம்பா, குண்டு கார், சேலம் சம்பா, சிகப்பு குருவிகார், கல்லிமடையான், சம்பா மோசானம், வாடன் சம்பா, பிச்சாவாரி, நவரா, நீலன் சம்பா போன்ற 174 பாரம் பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை: