tamil.oneindia.com - hemavandhana :
போலீசிடம் தொடர்ந்து நடிக்கும் ராஜலக்ஷ்மி கொலையாளி தினேஷ்- வீடியோ
சேலம்: சாயம் வெளுத்து பல்லிளிக்க ஆரம்பிச்சும்... ஆத்தூர் தினேஷ் இன்னும் அடங்கவே இல்லை!!
ராஜலட்சுமி என்ற 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்து தலையை தூக்கி வீசியவர் தினேஷ்குமார். ராஜலட்சுமியை வன்கொடுமை செய்யும்போதும், தலையை துண்டிக்கும்போதும் சாதி பெயரை இழிவாக திட்டி திட்டியே தனது வன்மத்தை அரங்கேற்றியவர். இளைஞரின் இந்த அரக்க குணத்தை கண்டு தமிழகமே ஆடிப்போனது.
சிறுமியின் தலை, மனைவியின் சாட்சி உட்பட அனைத்து ஆதாரங்களும் அளவுக்கு அதிகமாக இருந்ததால் தினேஷ் உடனடியாக கைது செய்யப்பட்டார். போக்கோ சட்டத்துடன், குண்டர் சட்டமும் பாய்ந்து, சேலம் சிறையிலும் அடைக்கப்பட்டார்.
ஆனால்
இத்துணை கொடூரம் செய்த தினேஷ் சிறையிலும் அடங்கவில்லை. தான் ஒரு பைத்தியம்
பிடித்ததுபோலவும் சைக்கோ போலவும் நடிக்க ஆரம்பித்தார். இதனால் போலீசார்
ஆரம்பத்தில் திணறிபோய் விட்டனர். ஆனால் தினேஷின் ஓவர் ஆக்ஷன் அவரை
காட்டிக் கொடுத்துவிட்டது. ஆனாலும் தற்போது வரை அந்த நடிப்பை தினேஷ்
கன்ட்டினியூ பண்ணி வருவதுதான் சாமர்த்தியம்!!ராஜலட்சுமி என்ற 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்து தலையை தூக்கி வீசியவர் தினேஷ்குமார். ராஜலட்சுமியை வன்கொடுமை செய்யும்போதும், தலையை துண்டிக்கும்போதும் சாதி பெயரை இழிவாக திட்டி திட்டியே தனது வன்மத்தை அரங்கேற்றியவர். இளைஞரின் இந்த அரக்க குணத்தை கண்டு தமிழகமே ஆடிப்போனது.
சிறுமியின் தலை, மனைவியின் சாட்சி உட்பட அனைத்து ஆதாரங்களும் அளவுக்கு அதிகமாக இருந்ததால் தினேஷ் உடனடியாக கைது செய்யப்பட்டார். போக்கோ சட்டத்துடன், குண்டர் சட்டமும் பாய்ந்து, சேலம் சிறையிலும் அடைக்கப்பட்டார்.
3 தினங்களுக்கு முன்பு, சேலம் மகளிர் கோர்ட்டுக்கு விசாரணைக்காக போலீசார் அவரை பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். பிறகு விசாரணை முடிந்து போலீஸ் ஜீப்பில் ஏற்ற போகும்போது, திடீரென தினேஷ் கத்தினார். "சார்.. என்னை கொன்னு போட்டுடுங்க... என்னை தூக்கில் போடுங்க சார்... சினிமாவை பார்த்துட்டு நான் ரொம்ப பெரிய தப்பை பண்ணிட்டேன்" என்று கதறினார்.
கோர்ட் வளாகத்தில் இருந்தவர்கள் உட்பட எல்லோரும் தினேஷ் கத்தியதை பார்த்து ஷாக் ஆனார்கள். ஆனால் போலீசாரோ அமைதியாகவே நின்றனர். இதை பற்றி கேட்டதற்கு, "கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டதற்காக அவரிடம் கையெழுத்து வாங்கப்பட்டது. ஆனால் அந்த கையெழுத்தை யாருக்குமே புரியாத வகையில் வேண்டுமென்றே கிறுக்கி தள்ளினார்.
திரும்பவும் சைக்கோ வேலையை ஆரம்பிச்சார் போல இருக்கிறது" என்றார்கள். தற்போது வரை மனநலம் பாதிக்கப்பட்டவர் போல தினேஷ் பேசி வந்து கொண்டே இருக்கிறாராம். தொடர்ந்து நடித்து வரும் தினேஷூக்கு மனநல சிகிச்சை அளிக்க சிறை நிர்வாகம் முடிவு செய்தது.
அதுவும் இல்லாமல் நேற்று முன்தினம் தினேஷூக்கு திடீரென்று உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. அதன்படி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேலம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் நேற்று அழைத்து சென்றார்கள். மருத்துவமனையில் உள்ள ஸ்ட்ராங் அறையில் மனநலம் சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்தார்கள்.
இந்த ஸ்ட்ராங் ரூம் என்பது மருத்துவமனையில் தனி வளாகத்தில் இருக்க கூடியது. கைதிகள் தங்கி சிகிச்சை பெற வேண்டியிருந்தால் இங்குதான் அழைத்து வருவார்கள். தனி கட்டிடத்தில் அந்த வளாகம் முழுவதும் ராட்சச சுவர்களால் மூடப்பட்டு இருக்கும். சிகிச்சை முடியும்வரை எந்நேரமும் போலீஸ் பாதுகாப்பு கைதிகளுக்கு இருப்பார்கள். அப்படித்தான் தினேஷ் இப்போது ஸ்ட்ராங் ரூமில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக