திங்கள், 12 நவம்பர், 2018

மௌலானா அபுல்கலாம்ஆசாத் இந்தியாவை கட்டியெழுப்பிய.. தேசத்தின் காதலன்

இந்தியாவின் கல்வி முகங்களாக இருக்கும் . ஐஐடி , ஐஐஎம் , இந்திய அறிவியல் தொழில்நுட்ப கழகம் , தேசிய சட்டப் பள்ளிகள் , பல்கலைக்கழகங்கள் , பிராந்திய பொறியியல் துறை கல்லூரிகள்.. பள்ளிகள் என்று அனைத்தையும் தான் மந்திரியாக இருந்த காலத்தில் அசுரனைப் போல உழைத்து உருவாக்கியவர் ...
Sadhu Sadhath : வருத்தத்தோடவே இந்த பதிவை எழுதுகிறேன் ....
நேற்று 11_11_2018 இது ஒன்றும் ரொம்ப கடினமான ஞாபகத்தில் வைக்க முடியாத தேதியல்ல .. மிகவும் ஃபேன்சியான தேதி தான்..
ஆனாலும் ஒருவரின் பதிவுகளிலும் அந்த தேதியைப் பற்றிய பதிவைப் பார்க்கவே முடியவில்லை ...
காந்தியே மிகவும் விருப்பட்டு இவர் தான் இந்த துறைக்கு அமைச்சராக வேண்டும் வேறு யாரும் இதற்க்கு தகுதியானவரே இல்லை என்று அவருக்காக வாதிட்டார் ...
நேருவால் என்னுடைய அமைச்சரவையிலியே ஆகச் சிறந்த அறிவு மேதை என்று புகழப்பட்டவர்..
இதையெல்லாம் தூக்கி குப்பையில் கூட வீசுங்கள் பரவாயில்லை ஆனால்..
இந்தியாவின் கல்வி முகங்களாக இருக்கும் .
ஐஐடி , ஐஐஎம் , இந்திய அறிவியல் தொழில்நுட்ப கழகம் , தேசிய சட்டப் பள்ளிகள் , பல்கலைக்கழகங்கள் , பிராந்திய பொறியியல் துறை கல்லூரிகள்.. பள்ளிகள் என்று அனைத்தையும் தான் மந்திரியாக இருந்த காலத்தில் அசுரனைப் போல உழைத்து உருவாக்கியவர் ...

படிப்பறிவு இல்லாத தேசத்தில் படிப்பையும் அதுவும் தொழில்நுட்ப கல்வியையும் அதன் மூலம் வேலை வாய்ப்பு , பொருளாதார வளர்ச்சி, தொழிற்ச்சாலைகள் , புதிய கண்டுபிடிப்புகள் என தொழில்நுட்ப தேசமாக வளர்த்தெடுக்க திட்டம் தீட்டி இந்தியாவை கட்டியெழுப்பிய .. இந்த தேசத்தின் அப்பழுக்கற்ற காதலன் ...
அப்படி அவர் பார்த்து பார்த்து உருவாக்கிய ஐஐடி ஐஐஎம் என்று ஒன்றில் கூட அவரின் புகைப்படம் சாங்கியத்திற்க்காக கூட இல்லை என்பது எவ்வளவு பெரிய நன்றிக்கெட்டதனம் இது ...
அதே ஐஐடி ஐஐஎம் தேசிய அறிவியல் தொழிநுட்ப கழகம் இன்று உயர் ஜாதி ஆதிக்க ஜாதியினர் கைகளில் .. அவர்களை படிக்க வைத்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து அங்கேயே செட்டில்லாக வைப்பது என்கிற அளவில் கன்சல்டன்சி ஏஜென்சியாகவும் , தப்பித் தவறி படிக்க வரும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட , சிறுபான்மை சமூக மாணவர்களை மர்மமான முறையில் பலிவாங்கும் பலி பீடமாகவும் இருந்து வருகிறது ...
சுதந்திரமா ? மதங்களைக் கடந்து மக்களின் ஒற்றுமையா ? என்றால் சுதந்திரம் பிறகுதான் மக்களின் ஒற்றுமைதான் என்றவரின் ஐஐடியில் படித்த பத்ரி சேஷாத்ரி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தில் நான் மிகவும் சந்தோஷப்பட்டேன் என்று கூறுகிறார் என்றால் என்ன டேஷுக்கு ஐஐடி ஐஐஎம் ??
அவர் ஆரம்பித்த ஐஐடியில் படித்துவிட்டு, அரசு பள்ளிகள் பக்கம் தலைவைத்து படுக்காமல் , தனியார் பள்ளி கல்லூரிகளில் போய் கனவு காணச் சொல்லியும், ஜனாதிபதியாக இருந்த போது 3000 மக்கள் குஜராத்தில் படுகொலைச் செய்யட்ட போதும் கக்கனின் மறுபிறப்பாகவும் வாழ்ந்த அப்துல் கலாம் நினைவு கூறப்படுகிறார் , ஆனால் இவரைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை ...
ஒரேயொரு நிமிடம் உங்களைச் சுற்றிப் பாருங்கள் ஒரேயொரு இந்திய கண்டுபிடிப்பாவது இருக்கிறதா ? இட்லிக் குண்டானைத் தவிர ?? கண்டுபிடிப்புகளே இல்லாத, மக்களுக்கு பயன்படாத ஐஐடிகள் ஐஐஎம்கள் , பல்கலைக் கழகங்கள், என்ன மயிருக்கு ??
அவ்வளவு ஏன் சாகித்ய அகாடமி விருதுக்காக அலையும் இலக்கிய அற்பர்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை ... இதையும் , நாடக அகாடமியையும் , லலித் கலா அகாடமியையும் உருவாக்கி கலைக்கும் கட்டமைப்பை உருவாக்கியவர்...
இத்தனைக்கும் தேசிய கல்வி நாளாக அவருடைய பிளந்த நாளைக் கொண்டாடுலதாக வெற்று அறிவிப்பு .. ஆனால் ஒருவரும் அவரைக் கண்டுகொள்ளவே இல்லை .. ஏன் ? ஏன் ? ஏன் ??
ஏன் அவர் முஸ்லீம்களுக்கு மட்டுமே சொந்தமா ? முஸ்லீம்கள் மட்டுமே கொண்டாட வேண்டுமா ?? மற்றவர்களுக்கு அந்நியமா ??
அன்பின் மௌலானா #அபுல்கலாம்ஆசாத் உங்கள் பிறந்த நாளுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்

கருத்துகள் இல்லை: