
BBC :பாகிஸ்தானி கிறிஸ்தவ பெண் அசியா பீபிக்கு அடைக்கலம் தருவது தொடர்பாக கனடா பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தெய்வ நிந்தனை வழக்கில் கைது செய்யப்பட்ட அசியா, 8 ஆண்டு காலத் தனிமை சிறையை அனுபவித்தார். அண்மையில் பாகிஸ்தான் நீதிமன்றம் அசியா குற்றமற்றவர் என தீர்ப்பளித்து அவரை விடுதலை செய்தது. இதற்கு எதிராக இஸ்லாமிய அடிப்படைவாதிகள் வன்முறையில் இறங்கியதை அடுத்து அவருக்கு அடைக்கலம் தர பல நாடுகள் முன்வந்தன. ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அசியாவை கனடாவிற்கு அழைத்துவருவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக