மாலைமலர் : விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியில்
உள்ளது என்பதை திமுக தான் அறிவிக்க வேண்டும் என்று திருமாவளவன்
நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
வேலூர்
வேலூரில்
பொய்கையில், விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம்
இன்று நடந்தது. இதில் பங்கேற்க திருமாவளவன் வேலூர் வந்தார். அப்போது அவர்
நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கை அதிபர் சிறிசேனா பதவி விலகுவது தான் சரியாக இருக்கும்.
பணமதிப்பு நீக்கம் நடவடிக்கையில் மோடி சர்வாதிகார போக்குடன் செயல்பட்டார். 2019 நாடாளுமன்ற பொது தேர்தலில் மோடிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
தி.மு.க.வுடன், விடுதலை சிறுத்தை கூட்டணி அதிகாரபூர்வமாக அறிவிக்கக்கூடிய பொறுப்பு தி.மு.கவு.க்கு தான் உண்டு. தி.மு.க.வுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி இணக்கமாக தான் இருந்து வருகிறது.
பா.ஜ.க கொள்கை கோட்பாடு இந்திய தேசத்திற்கு, இந்திய மக்களுக்கு எதிரானது என்பதை சுட்டிக்காட்டும் விதமாக தி.மு.க உள்ளிட்ட எதிர் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட முன் வந்துள்ளது.
பா.ஜ.க ஆபத்தான கட்சியா என்பதற்கு நேரடியாக பதில் சொல்ல விரும்பாமல் பலசாலியா இல்லையா என்று திசை திருப்பி இருக்கிறார் ரஜினிகாந்த்.
பாம்பை கண்டால் படையுமே நடுங்கும் என சொல்லுவார்கள். அப்படி என்றால் படையை விட பாம்பு வலிமையானது என்பது பொருள் அல்ல,
படையே நடுங்கும் அளவிற்கு பாம்பு நஞ்சானது, தீங்கானது, ஆபத்தானது என்பது பொருள். ஆகவே 10 பேர் சேர்ந்து பாம்பை அடிப்பதால் பாம்பு பலசாலியாகி விடாது. இப்படி தான் பா.ஜ.கவை பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக