திங்கள், 12 நவம்பர், 2018

டிக் டாக் – அவுத்துப் போட்டு ஆடு – அராத்து.. charuonline.com

தமிழ் நாட்டில் பெரும்பாலான பெண்கள் தன்னை சினிமா ஹீரோயினாகவே நினைத்துக்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். சினிமா என்பது கேளிக்கை மட்டுமல்ல இவர்களுக்கு. அவர்கள் வாழும் வாழ்க்கையையே ஒரு சினிமாவாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது இந்த ஆப்பின் மூலம் தெரியவருகிறது.
இவர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கை இருக்குமா என்பதே சந்தேகமாக உள்ளது. தங்கள் வாழ்வையை , சினிமாவில் இருந்து எடுக்கும் சீன்கள் மூலம் நிரப்பிக்கொள்கிறார்கள்.தங்கள் வாழ்வின் எந்த சிச்சிவேஷனிலும் , அதற்கு சம்மந்தப்பட்ட சினிமா சீனை எடுத்து , அதில் வரும் வசனங்களை பேசுவார்கள் போல.
ஏற்கனவே எழுதப்பட்ட பலப்பல சினிமா சீன்களில் கற்பனையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஒரு காலத்தில் ஃபேஸ்புக்கில் போட்டோ போடவே பயந்த பெண்கள் திரள் திரளாக இந்த டிக் டாக்கில் ஆடிக்கொண்டும் ஆட்டிக்கொண்டும் இருப்பது ஒரு நல்ல மாற்றம் தான் எனினும் , இதை தமிழக பெண்கள் எப்படி கையாள்கிறார்கள் என்று பார்த்தால் ஏமாற்றம் தான்.
தமிழ் நாட்டில் இவ்வளவு அழகுப் பெண்களா , இத்தனை ஹீரோயின் மெட்டீரியலா என்று ஒரு பக்கம் மலைப்பாக இருக்கிறது. இவர்கள் எல்லாம் எங்கே ? நம் கண்ணில் படுவதே இல்லையே என்று தோன்றும் போதுதான் புரிகிறது , இந்த ஆப் அவர்களை அழகுபடுத்தி காண்பிக்கிறது. இந்த ஆப் அவர்களை அழகாக காட்டுகிறது என்ற அம்சம் தான் இந்த ஆப் இந்த அளவுக்கு பிரபலமாகக் காரணம்.

வெளிநாடுகளில் நோண்டிப்பார்த்தேன். அங்கு விதம் விதமான விடியோக்கள். காமடி , அட்வென்ச்சர் , தனித்திறமை என ரகம் ரகமாக இருக்கிறது.
இந்தியாவில்தான் அனைத்து விடியோக்களும் ஒரே மாதிரி பெண்கள் ஆக்கிரமித்து இருக்கிறார்கள். அதிலும் தமிழ்நாட்டுக்கும் வட நாட்டுக்கும் ஒரு வித்தியாசம்.
வட இந்தியப் பெண்கள் பெரும்பாலும் வயிறையும் தொப்புளையும் காண்பிக்கிறார்கள். தமிழ் நாட்டில் அப்படி காண்பிப்பது இல்லை. தமிழ் நாட்டுப்பெண்களுக்கு தொப்பை இன்னும் குறைய வில்லை என்பதையே இது காட்டுகிறது :-) குழைந்த வயிறே தமிழகத்தில் சாத்தியம் இல்லை போல !
தொப்புளைத்தான் காட்டுவதில்லையே தவிர , க்ளீவேஜ் , பிருஷ்டம் , தொடை , 70 எம் எம் முதுகு , என மெனக்கெட்டு கிளுகிளுப்பூட்டுகிறார்கள் தமிழ் நாட்டுப் பெண்கள்.
இங்கு நாம் ஃபேஸ்புக்கில் அமர்ந்து மாங்கு மாங்கென்று 10 வருடங்கள் எழுதியும் 30000 ஃப்லோயர்ஸ்தான். நாலு கிளு கிளு விடியோ போட்ட பெண்ணுக்கு ஒரு லட்சம் ஃபாலோயர்ஸ் ,2 லட்சம் ஃபாலோயர்ஸ் என ஸ்பீடா மீட்டர் எகுறுகிறது.
சோஷியல் மீடியா இனியும் இருக்கும் என்றாலும் , எழுத்து கொஞ்சம் கொஞ்சமாக அழியும். படிக்கும் நபர்களும் எழுதும் நபர்களும் குறைந்து கொண்டே வருவார்கள். படிக்க அவ்வளவு சோம்பல்தனமாக இருக்கிறது போல. விடியோ தான் எதிர் காலம் என நினைக்கிறேன். இங்கே ஃபேச்புக் பக்கமே வராத ஒரு பெருங்கூட்டம் யூ டியூப் , டிக் டாக் என குடித்தனம் நடத்திக்கொண்டு இருக்கிறது.
தன் அழகை வெளிப்படுத்திக்கொள்ள பெண்களுக்கு எப்போதும் ஆர்வம் இருக்கும். இது யாருக்கும் தெரியாத ரகசியம் அல்ல. இப்போது அது ஒரு படி மேலே போயிருக்கிறது. தன்னைச் சுற்றி இருப்பவர்களைத் தாண்டி , யாரென்றே தெரியாத பெருங்கூட்டத்துக்கு தங்கள் அழகை காட்ட வேண்டும் என்ற ஆசை பிய்த்துக்கொண்டு அடிக்கிறது. கவர்ச்சி காட்டினால்தான் , கிளாமர் காட்டினால்தான் , உடலை திறந்து செக்ஸியாக காட்டினால்தான் நிறைய ரசிகர்கள் கிடைப்பார்கள் என்பது தெரிந்து அதேபோல செயல்படுகிறார்கள் பெண்கள். அவர்களுக்கே தெரியும் நம் விடியோவைப் பார்த்து சில ஆண்கள் சுய இன்பம் அனுபவிக்கக்கூடும் என்பது. நம் விடியோவைப் பார்த்து ஆயிரக்கணக்கானவர்கள் நம்மை விர்ச்சுவலாக புணர்கிறார்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு பயங்கர எக்சைட்மெண்டாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
பெண்ணிய வாதிகள் பெண்ணின் உடலை பண்டமாக பார்க்கக்கூடாது , அதை வைத்து வியாபாரம் செய்யக்கூடாது என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்த நிலையில் , பெண்களே தங்கள் உடலை மட்டுமே மூலதனமாகக் கொண்டு அதன் பாகங்களை கவர்ச்சியாக காட்டி ரசிகர்களை ஏற்றிக்கொண்டு செல்வதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்று தெரியவில்லை.
பெண்கள் ஏரியாவாக ரவுண்டு கட்டி அடித்துக்கொண்டிருக்கும் இந்த ஆப்பில் சில ஆண்களும் பாவம் , கோமாளிகள் போல ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்.
நிறைய ஜோடி நடனங்கள் , ஜோடி கவர்ச்சியும் உண்டு.
காதல் ,காமம் என்பதெல்லாம் பர்ஸனல் , தனிப்பட்ட விஷயம் என்பது மாறி , அனைத்தையும் பொதுவெளியில் காட்டி , எக்சிபிஷன் போல வைக்கும் மனநிலை வலுப்பெற்று வருகிறது. இதை நான் ஒரு எக்சிபிஷனிசம் என்ற வகையில்தான் பார்க்கிறேன்.
ஆக்சுவலி இது ஒருவகையான மனநோய். எக்சிபிஷனிசம் என்பது –
Exhibitionism is the act of exposing in a public or semi-public context those parts of one’s body that are not normally exposed – for example, the breasts, genitals …- விக்கிபீடியாவில் இப்படித்தான் எழுதி இருக்கிறது.
இந்த நோய் டிக் டாக்கில் இன்னும் முற்றவில்லை. ஆரம்ப நிலையில்தான் இருக்கிறது. அதனால்தான் க்ளீவேஜ் , தொப்புள் , இடை , தொடை என நிறுத்திக்கொள்கிறார்கள். நோய் அதிகமாகும் பட்சத்தில் , அனைத்தையும் திறந்து காட்டுவார்கள் என்று நினைக்கிறேன்.
இந்த நோய் பெண்களுக்கு அதிகமாக இருக்கிறது. அவர்களின் பாய் ஃபிரண்டு அல்லது கணவனுக்கும் நோய்த்தொற்று ஏற்படுகிறது.
பெண்கள் அங்கீகாரத்திற்கு ஏங்குகிறார்கள். இப்போதுதான் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது என்றெல்லாம் பம்மாத்து காட்டக்கூடாது. ஒரு திறமையை , உலகமே அங்கீகரிக்க வேண்டும் என்று நினைப்பது நியாயம். தன் உடலைப் பார்த்து உலகமே சொக்கி ஆட்டின் விட வேண்டும் என்று நினைப்பதால்தான் இதை மனநோய் என்கிறேன்.
காதல் ,அன்பு ,காமம் எல்லாம் தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தது மாறிக்கொண்டு வருகிறது. இப்போது இவைகளையும் பொது வெளியில் வைத்தால்தான் திருப்தி வருகிறது. தனியாக அறையில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கையில் இருக்கும் இன்பத்தை விட அதை விடியோவாக எடுத்து பொதுப்பார்வைக்கு வைத்து 1 லட்சம் பேர் அதைப் பார்த்து ஆட்டின் விடுகையில்தான் ஆர்கச இன்பம் இவர்களுக்குக் கிடைக்கிறது.
இதன் தொடர்ச்சியாக , எதிர் காலத்தில் முதல் இரவுக் காட்சிகள் , முண்ட கட்டையாக குளிக்கும் காட்சிகள் , 3 ஸம் காட்சிகள் , அடித்து நொறுக்கும் ஆர்கசக் காட்சிகள் எல்லாம் ஆன்லைனில் காணக் கிடைக்கும். அந்த ஆர்கசம் கூட புணருவதால் வராது , புணர்ந்து கொண்டே இருக்கையில் , விடியோவில் ஏறிக்கொண்டு இருக்கும் லைக் ,ஆட்டின்களைப் பார்த்துதான் வரும்.
பின் குறிப்பு : இந்த கட்டுரையாளர் , பெண்கள் உடை அணியும் விஷயத்தில் எந்த வேறுபாடும் இல்லாதவர். நீச்சல் உடை, குட்டைப் பாவாடை போன்றவற்றிற்கு வெறித்தனமான ஆதரவாளர். பெண்கள் தனிப்பட்ட வாழ்வில் எந்த உடையும் அணியலாம் ,குடிப்பது ,கூத்தடிப்பது , ஊர் சுற்றுவது , டேட்டிங்க் செல்வது , என அனைத்தையும் அவர்களின் சுதந்திரம் என ஆதரிப்பவர். இது வேறு , இந்த கட்டுரையின் மையம் வேறு. அதனால் பெண்களே , கட்டுரையாளரை பெண்களின் எதிரியாக சித்தரிக்க முயல்வார்கள். பலியாகாமல் இந்த கட்டுரையாளரை மனமார காதலிக்கும்படி கோரப்படுகிறது.

கருத்துகள் இல்லை: