திங்கள், 12 நவம்பர், 2018

அழகிரி ஆதரவாளர் வெட்டி கொலை .. முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர்

m
mnakkheeran.in : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பாலமேடு அருகே சத்திர வெள்ளாளபட்டி கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவரும், மு.க. அழகிரி ஆதரவாளருமான  மதுரை வீரன் இன்று அதிகாலையில் அவர் வீட்டருகிலேயே வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.  இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்கு காரணம் முன் விரோதமா? பெண் தொடர்பா? என்ற கோணத்தில் அலங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.< கடந்த 2 மாதங்களுக்கு அழகிரி தலைமையில் இவரின் மகளுக்கு திருமணம் நடைபெற்றது.  இவ்விழாவில் வாழ்த்திய அழகிரி,  மதுரை வீரன் போன்ற வீரர்கள் என்னுடன் இருக்கும்போது என்னை யாரும் அசைக்க முடியாது என்று கூறினார்.  இந்நிலையில் மதுரை வீரன் மரணம் அழகிரிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.--முகில்/

கருத்துகள் இல்லை: