ஞாயிறு, 11 நவம்பர், 2018

முன்னாள் பாஜக அமைச்சர் ..சுரங்கமாபியா ஜனார்த்தன ரெட்டி கைது

கைதான ஜனார்த்தன ரெட்டிக்கு  24-ம் தேதிவரை நீதிமன்ற காவல்
ரெட்டி சகோதர்கள்  சுஷ்மா சுவராஜ்
மாலைமலர் :பெங்களூருவில் இன்று கைதான
கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டியை 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பெங்களூரு: பொருளாதார அமலாக்கத்துறை பிரபல நிதி நிறுனத்துக்கு எதிராக  நடத்திவந்த விசாரணையில் இருந்து காப்பாற்ற அந்த நிதி நிறுவனத்திடம் இருந்து 18 கோடி ரூபாய் மதிப்பிலான 57 கிலோ தங்கக் கட்டிகளை லஞ்சமாக பெற்றதாக கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அவரது முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மூன்று நாட்கள் தலைமறைவாக இருந்த ஜனார்த்தன ரெட்டி பெங்களூரு சாம்ராஜ் பேட் பகுதியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் நேற்று ஆஜரானார்.
போலீசார் அவரிடம் விடிய,விடிய விசாரணை நடத்தி வந்தனர். இன்று பிற்பகல் ஜனார்த்தன ரெட்டியை அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்நிலையில், மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் நீதிபதி முன்னர் இன்று மாலை அவர் ஆஜர்படுத்தப்பட்டார். வரும் 24-ம் தேதிவரை ஜனார்த்தன ரெட்டியை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்து வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். #JanardhanReddy  #judicialcustody

கருத்துகள் இல்லை: