செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

விஜயகாந்தின் மொதலாளி சுப்பிரமணியம் சாமி.. அந்த துரை சொல்றதை.....

விஜயகாந்தின் வாக்கு வங்கி மிகவும் சரிந்தே போய்விட்டது. தேமுதிகவின்
இன்றைய வீழ்ச்சிக்கு வழிகோலியது விஜயகாந்தும் பிறேமலதாவும்தான். ஜெயலலிதாவை போல் இனி ஒருவர் அரசியலில் வருவது முடியாத காரியம்.

விஜயகாந்த் தன்னை ஒரு எம்ஜியராகவும் எண்ணி எம்பி எம்பி குதிக்க பிறேமலதாவோ தன்னை ஒரு வருங்கால ஜெயலலிதாவாக கற்பனையில் மிதக்க தொடங்கி விட்டார்,
ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசம் தமிழகத்தின் வரலாற்று சோகம்.
அது புரியாமல் இவர்கள் போடும் கூத்துதான் தேமுதிகவின் அரசியல்.

இவர்களின்  தரம் தாழ்ந்த பேச்சுக்கள் தேமுதிகவின்  அரசியல் வெறுமையை தெளிவாக காட்டுகிறது.
சுப்பிரமணியம் சாமி அமித்ஷா போன்றோரின் அட்டவணைக்கு ஏற்ப அரசியல் நடத்தும் பாமரத்தனம் இவர்களிடம் தெரிகிறது.

சுப்பிரமணியம் சாமிக்கு எப்படியும் திமுகவை ஒழிக்கவேண்டும். கலைஞரை கேவலப்படுத்த வேண்டும் . இந்த  நோக்கங்களை இந்த தராதரம் அற்றவர்கள் மூலம் செய்துவிடலாம் கனவு காண்கிறார்.

விஜயகாந்த் திமுகவோடு பேரம் பேசுவது தனது கியாதி எவ்வளவு என்று தானே தெரிந்து கொள்ளவும் பாஜகவிடம் தனது ரேட்டை ஊட்டி காட்டவும்தான்.


தற்போது சுதீஷ் பிரேமா எல்லாம் பதவிக்காக துடிக்கிறார்கள். அவர்களுக்கு நன்றாக தெரியும் தங்கள் கப்பல் மூழ்க தொடங்கி விட்டது.
சினிமா பாணியில் சவடால் அரசியல் செய்யலாம் என்று பார்க்கிறார்கள்.
இவர்கள் திமுக கூட்டணியில் சேர்ந்தாலும் ஒழுங்காக வேலை செய்யமாட்டார்கள், உள்ளடி வேலை செய்வார்கள்.
ஏனென்றால் அவர்களுக்கு சுசாமி பாஜக வகையறாக்கள் கொடுத்த அஜண்டா அதுதான்.

கருத்துகள் இல்லை: