சின்னத்திரையில் கிடு கிடுவென உயர்ந்த நிலையை எட்டிய மதுரை
முத்துவை தெரியாதவர்களே இல்லை எனலாம். இவரது இளம் மனைவி விபத்தில் மரணம் அடைந்ததையிட்டு அதிர்ச்சியில் சின்னத்திரையினர் . பல மேடைகளில் தன் நகைச்சுவை பேச்சால் மக்களை சிரிக்க வைத்தவர் மதுரை முத்து. இதை தொடர்ந்து ஒரு சில படங்களில் கூட தலையை காட்டினார்.இந்நிலையில் இன்று சிவகங்கை பிள்ளையார்பட்டி கோவிலுக்கு இவருடைய மனைவி வையம்மாள் சென்றுள்ளார். அப்போது திருப்பத்தூர் கோட்டையிருள் பகுதியில் கார், ட்ரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஒரு மரத்தில் மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே முத்துவின் மனைவி வையம்மாள் இறந்துள்ளார். காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஓட்டுநர் பாண்டியும் பலத்த காயம் அடைந்தார். வையம்மாள் உடல் மதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஓட்டுநர் பாண்டி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, கலை நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்ற மதுரை முத்துவிற்கு மனைவி இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு அவசரமாக விமானம் மூலம் முத்து மதுரைக்கு வந்து கொண்டிருக்கிறார்
இச்சம்பவம் சின்னத்திரை கலைஞர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த முத்துவின் வாழ்க்கையில் இப்படி ஒரு துயரம் தாங்க முடியாதவை தான். சினி உலகம் முத்துவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது…

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக