கூடுவாஞ்சேரி, ஈக்காட்டுத்தாங்கல் ஆகிய பகுதிகளில் வீடுகளை கட்டித்
தருவதாக விளம்பரம் செய்து இருந்தனர். மேலும் அதற்கான வீட்டுக் கடன் தொகையையும் தனியார் நிறுவனத்திடம் பெற்றுத் தருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதை நம்பி ஏராளமானோர் கடந்த 2013–ம் ஆண்டு அக்டோபர் முதல் குறிப்பிட்ட தொகையை கட்டுமான நிறுவனத்திடம் செலுத்தி வந்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பணம் செலுத்தியவர்களுக்கு வீட்டு சாவியை அவர்கள் வழங்க வேண்டும். ஆனால், யாருக்கும் வீட்டு சாவியை கொடுக்க வில்லை. இதையடுத்து பணம் கட்டியவர்கள் வீடு கட்டப்படுவதாக கூறிய நுங்கம்பாக்கம் கிராமத்திற்கு சென்று பார்த்ததனர். அங்கு காலி மனையாக இடம் இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் விசாரித்தபோது, ‘மனையிடத்தில் கட்டுமான அனுமதி பெறாமல் உள்ளது, பொது மக்கள் யாரும் வாங்க வேண்டாம்‘ என ஊராட்சி நிர்வாகம் அறிவிப்பு பலகை வைத்திருந்தது தெரிந்தது
மேலும், கட்டப்படாத வீடுகளை கட்டியதாக தனியார் நிறுவனத்திடம் போலி ஆவணங்களை தயாரித்து கடன் பெற்றுள்ளதும் தெரிந்தது.
இதனால் பணம் கட்டி ஏமாந்த 25–க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் டூப்பிரண்டு சாம்சனிடம் புகார் கொடுத்தனர். நடிகர் எஸ்.எஸ்.ஆர். மகள் லட்சுமியும் கட்டுமான நிறுவன அதிபர் பத்மநாபன், அவரது மகன் தமிழ் மீது நில மோசடி செய்ததாக புகார் மனு கொடுத்தார்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., உதயசங்கர், இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இதில் கட்டுமான நிறுவனம் நுங்கம்பாக்கம், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் வீடு கட்டி தருவதாக 320 நபர்களிடம் ரூ.300 கோடிக்கு மேல் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து கட்டுமான நிறுவன நிர்வாகிகள் பத்மநாபன், அவரது மகன் தமிழ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. maalaimalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக