வியாழன், 4 பிப்ரவரி, 2016

அரசு மீது லஞ்ச ஊழல் புகார்களை கூற அரசு அனுமதி வேண்டும்...ஹிட்லர் கெட்டவன்னு கூற ஹிட்லரின் அனுமதி வேண்டும்

அரசுப் பணியாளர்கள் மீதான இலஞ்ச, ஊழல் புகார்கள் கூறவேண்டும்
என்றால், அரசின் அனுமதி பெறவேண்டும் என தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தமிழக அரசின் தலைமைச்செயலாளர் கு.ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அந்த அரசாணையில், தற்போதைய இலஞ்ச ஒழிப்பு போலீஸ் துறையானது, இனிமேல் அரசு ஊழியர்கள் மீதான புகார்களை, கண்காணிப்பு ஆணையத்துக்கு அனுப்பும் என்றும் அந்தப் புகார்கள் குறித்து ஒருவேளை கண்காணிப்பு ஆணையமானது விசாரணை நடத்த உத்தரவிடும்பட்சத்தில், அரசின் குறிப்புகளைப் பெற்ற பிறகு, இலஞ்ச ஒழிப்பு போலீசின் விசாரணைக்கு ஆணையம் உத்தரவிடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.>உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் முன்னர் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில்தான், இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டாலும், இலஞ்ச ஊழல் ஒழிப்பு இயக்கங்கள் மத்தியில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.nakkheeran,in

கருத்துகள் இல்லை: