ம.தி.மு.க.,வில் இருப்பது இனி ஒருவரே; அவரையும் கலைஞர் மன்னிப்பார்' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்தார்.
ம.தி.மு.க.,விலிருந்து விலகி, சமீபத்தில் தி.மு.க.,வில் இணைந்த,
பாலவாக்கம் சோமுவின் மகன் திருமணம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள,
அக்கரையில் நேற்று நடந்தது. விழாவில், தன் மனைவி துர்காவுடன் பங்கேற்ற ஸ்டாலின் பேசியதாவது:
நான் தொடர்ந்து, சுய மரியாதை திருமணங்களை நடத்தி வைக்கிறேன்.
'சுய மரியாதை திருமணம் சட்டப்படி செல்லுபடியாகும்' என,
அங்கீகாரம் அளித்தவர் அண்ணாதுரை. ம.தி.மு.க.,வில் இருந்தபோதே,
தி.மு.க.,வினரோடு தொடர்பில் இருந்தார்பாலவாக்கம் சோமு. சில காலம் விலகி
இருந்த அவர், மீண்டும் தாய் கட்சியில் சேர்ந்துள்ளார். இப்போது, ம.தி.மு.க.,வில் ஒருவர் மட்டுமே இருக்கிறார். 'தற்போது வைகோ வந்தால், அவரை தி.மு.க.,வில் சேர்த்து கொள்வீர்களா?' என, நீங்கள் கேட்கலாம். கருணாநிதி, எப்படிப்பட்ட சூழ்நிலையிலும், யாரையும் மன்னிக்க கூடியவர்.
அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில், முதல்வர்ஜெயலலிதா அரை மணி நேரம் பேசியுள்ளார். அதில், 25 நிமிடங்கள், என், 'நமக்கு நாமே பயணம்' பற்றியே விமர்சித்து உள்ளார். இதிலிருந்தே, 'நமக்கு நாமே பயணம்' மக்கள் மனதில் மட்டுமின்றி, முதல்வர் மனதிலும் பதிந்திருப்பதை அறியலாம். எனவே, கருணாநிதி தலைமையில், மீண்டும் தி.மு.க., ஆட்சி மலர, அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.தினமலர்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக