வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

லஞ்ச அதிகாரிகளை காப்பாற்ற அரசு புதிய ஆணை...இளங்கோவன்

லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை காப்பாற்ற தமிழக அரசு புதிய அரசாணையை பிறப்பித்திருக்கிறது: இளங்கோவன் லஞ்ச லாவண்யத்தில் ஈடுபடும் அரசு அதிகாரிகளை காப்பாற்றுவதற்காக தமிழக அரசு புதிய அரசாணையை பிறப்பித்திருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு ஊழியர்கள் யார் ஊழல் செய்தாலும், முன் அனுமதியின்றி அவர்கள் மீது வழக்கு தொடர முடியாது என்று தமிழக அரசு பிறப்பித்துள்ள புதிய அரசாணை தவறானது. லஞ்சம் பெறுவதற்காக அதிகாரிகள் இடைத்தரகர்களாக பயன்படுத்தப்படுகின்றனர். பின்னே  அவுங்கதான் இப்ப ஏஜெண்டுகளாச்சே?
லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை காப்பாற்றுவதற்காகவே இதுபோன்ற அரசாணை கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றால் ராகுல் காந்திதான் முதல் அமைச்சர் என்று கூறியதில் எந்த சர்ச்சையும் இல்லை. இது காங்கிரஸ் தொண்டர்களின் விருப்பம். தேர்தல் கூட்டணி குறித்து கட்சி மேலிடமே முடிவு செய்யும் என்றார். nakkheeran,in

கருத்துகள் இல்லை: